தோனி அமெரிக்கா வருவார்.. ஆனா அங்க வருவது கஷ்டம்.. ரோஹித் சர்மா!

Rohit Sharma: எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூ அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சமயத்தில் எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என ரோஹித் பிக் அப்டேட்டை கொடுத்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மைக்கேல் வாகனுடன் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கிளப் ப்ரேரி ஃபயர் என்ற பாட்காஸ்டில் கலந்துரையாடினார். அதில் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடர் மற்றும் இந்திய அணி வீரர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
அப்போது ரோஹித் கூறியதாவது, ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார். அதுவும் கடைசி இரண்டு போட்டிகளில் அவரது பேட்டிங் அபாரமாக இருந்தது. அதேபோல் எங்களுக்கு எதிரான போட்டியில் எம்எஸ் தோனியின் அதிரடி ஆட்டமும் சிறப்பாக இருந்தது.
கடைசி ஓவரில் அவர் அடித்த 20 ரன்கள் தான் எங்கள் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று கூறினார். இதையடுத்து ரோஹித் கூறியதாவது, உலகக்கோப்பை தொடரின்போது எம்எஸ் தோனியை வெஸ்ட் இண்டீசுக்கு வருவார் என நம்புவது கடினமான ஒன்று, ஆனால் அவர் அமெரிக்காவில் இருப்பார் என்று கூறினார்.
தோனி கொஞ்சம் சோர்வாகவும் உடல் நலம் சரி இல்லாமல் இருப்பது போல் தெரிகிறது. இதனால் ஓய்வுக்காக அவர் அமெரிக்கா வர வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் எம்எஸ் கோல்ஃப் விளையாடி வருகிறார். இதற்காக கூட அமெரிக்கா வருவார் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025