லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய நாள் ஆட்டம் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டு அணிகளுமே 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன என்பதால் 2 அணிகளும் 2வது வெற்றி பெற இன்றைய ஆட்டத்தில் தங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா […]
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர் ரோஹித் சர்மா எப்போது பார்முக்கு திரும்புவார் என்பதில் தான் இருக்கிறது. ஏனென்றால், இந்த சீசனில் அவர் 3 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில் மொத்தமாக 21 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். எனவே, அவருடைய பேட்டிங் மீது விமர்சனங்களும் எழ தொடங்கியுள்ளது. இப்படியான மோசமான பார்மில் இன்று மும்பை லக்னோ அணியை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், அந்த போட்டியில் […]
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில் மும்பை அணிக்காக கேப்டனாக விளையாடி ரோஹித் ஷர்மா தான் 5 முறையும் அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்தார். கேப்டனாக இருந்த அவரை மும்பை அணி மற்ற அணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்த சூழலில் இப்போது அவர் கேப்டனாக இல்லாமல் வீரராக விளையாடுவதும் அணியின் செயல்பாடும் சரியாக இல்லை என்கிற விமர்சனங்களும் எழுந்திருக்கிறது. கடந்த ஆண்டு […]
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன் மூத்த வீரர்களை ஒப்பிட்டு பேசும் வசை பேச்சுகளும் எழ தொடங்கிவிட்டன. ஒரு காலத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டில் கோலோச்சி இருந்தாலும் தற்போது அவர்களால் இளம் படையினருடன் போட்டியிடும் அளவுக்கு அவர்களின் விளையாட்டு திறன் இல்லை என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது. ‘ஃபினிஷர்’ தோனி மிஸ்ஸிங் இந்த வசைபாடுகளில் நடப்பு ஐபிஎல்-ல் முதல் ஆளாக சிக்கி இருப்பவர் சென்னை […]
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, 116 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. மும்பையின் அறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து, எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி சார்பாக, ரிக்கெல்டன் (62) அதிரடியாக அரைசதம் விளாசினார். இறுதியில், 12.5 ஓவரில் 121 ரன்கள் எடுத்து மும்பை […]
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். ரகானே தலைமையிலான கொல்கத்தா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. டாஸ் வென்ற பிறகு இரு அணிகளும் தங்கள் அணியின் 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டனர். அதில் தான் ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மும்பை […]
மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோத உள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு நடைபெறும் போட்டி என்பதால், சொந்த மண்ணில் வெற்றி பெற மும்பை அணி முயற்சிக்கும். அதேபோல், 2 போட்டிகளில் 1 வெற்றி, 1 தோல்வி பெற்றுள்ள கொல்கத்தா அணி, இன்றைய போட்டியில் […]
மும்பை : ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணிக்கு இந்த நிலைமையா? என ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு இந்த ஆண்டு விளையாடிய 2 போட்டிகளிலும் மும்பை தோல்வியை தழுவி புள்ளி விவர பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதைப்போல, அணியில் முக்கிய வீரராக இருக்கும் ரோஹித் ஷர்மாவின் பார்மும் சற்று மோசமாக தான் இருந்து வருகிறது. ஏனென்றால், முதல் போட்டியில் 0 ரன்களிலும், அடுத்த போட்டியில் 8 ரன்கள் என ஆட்டமிழந்து கம்பேக் […]
அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசனின் ஒன்பதாவது போட்டி இந்ரயு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்தகுஜராத் அணிஅணி வீரர்கள் பவுண்டரிகளை பறக்கவிட்டனர். குஜராத் அணி சார்பாக, சாய் சுதர்ஷன் 41 பந்துகளில் 63 ரன்களும், ஷுப்மான் கில் 27 பந்துகளில் 38 ரன்களும், ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் 39 […]
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் வெற்றிக் கணக்கைத் தொடங்கவில்லை. இதனால், இந்த போட்டியில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகிறது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, அதிரடியாக விளையாடி வந்த குஜராத்தின் தொடக்க பார்ட்னர்ஷிப்பை கேப்டன் ஹர்திக் உடைத்தார். குஜராத் […]
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் – மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த 9-வது போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்பொது (7 மணி அளவில்) டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், முதலில் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி […]
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக சென்றார் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ஹர்திக் பாண்டியா. அந்த வருடம் குஜராத் அணி கோப்பையையும் கைப்பற்றியது. ஆனால் அடுத்து கடந்த சீசனில் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு திரும்பினார். ஆனால், கடந்த முறை வருகையில் குஜராத் அணியை வழிநடத்தியது போல கேப்டனாக தான் வருவேன் என கண்டிஷன் விதித்தார் என்றெல்லாம் பேச்சுக்கள் […]
அகமதாபாத் : நேற்று (மார்ச் 25) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை தியாகம் செய்து அணிக்காக விளையாடியது தான் பேசுபொருளாக மாறியிருக்கிறது. குஜராத் அணிக்கு எதிரான அந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் விளாசி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஒரு ஓவர் இருந்த நிலையில் அவர் நினைத்திருந்தால் மற்றோரு முனையில் நின்று கொண்டிருந்த ஷாஷாங்க் சிங்கிடம் […]
அகமதாபாத் : நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய விளையாட்டு தான் கிரிக்கெட் செய்திகளில் ஹாட் ட்ரென்டிங் டாப்பிக்காக மாறியுள்ளது. 42 பந்துகளில் 97 ரன்கள் விளாசிய அவர் சதத்தை தவறவிட்டால் அவருடைய அதிரடி ஆட்டம் இன்னும் ரசிகர்கள் கண்ணைவிட்டு போகவில்லை என்று தான் சொல்லவேண்டும். 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு எதிராணிக்கு தனது பேட்டிங்கின் மூலம் பயத்தை காட்டினார். அது மட்டுமின்றி, குஜராத் அணிக்கு […]
அகமதாபாத் : நேற்று ஐபிஎல் ஆட்டத்தில் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய குஜராத் அணி 232 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டது. இந்த போட்டியில் பஞ்சாப் வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். 11வது ஓவரில் களமிறங்கிய இவர் […]
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் எதிநோக்கும் மிக முக்கிய போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025-ன் இந்த 3வது போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு சர்வதேச ரசிகர்கள் மத்தியில் எந்தளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ , அதற்கு சற்றும் குறைவில்லாமல் இப்போட்டி அமையும் என்பதில் எந்த சந்தேகமும் […]
சென்னை : நடப்பு ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், நாளை சென்னையில் மும்பை அணியும் , சிஎஸ்கே அணியும் மோத உள்ளன. ஐபிஎல் போட்டியில் மும்பையும் சென்னையும் பரம எதிரிகள். இருவரும் மோதிக்கொள்ளும் போட்டியை இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் போல் ரசிகர்கள் பெரியதாக பார்ப்பது உண்டு. இந்நிலையில், சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பயற்சியில் ஈடுபட்ட ரோஹித் சர்மா, 7வது எண் கொண்ட தோனி ஜெர்சியை அணிந்திருந்து ஒரு சிறிய சிஎஸ்கே […]
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம் தேதி வென்றது. இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிவாகை சூடியது. 2025 ஐசிசி சாம்பியன்ஸ் போட்டியை பாகிஸ்தான் நடத்தி இருந்தாலும் இந்திய அணி பங்கேற்ற அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற்றன. ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு முன்னதாக முதற்பரிசு தொகை 2.24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய […]
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில். அவர் வரவிருக்கும் 2027 ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏனென்றால், ரோஹித் சர்மா ஓய்வு பெறவேண்டும் என்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா வெற்றிபெற்றவுடனே ஓய்வை அறிவித்திருக்கலாம். இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி அடுத்ததாக விளையாடவிருக்கும் மிக்பெரிய தொடர் என்றால் உலகக்கோப்பை 2027 தான். ஏற்கனவே, ரோஹித் டி20 […]
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். அதன்பிறகு ஒரு நாள் போட்டிகளில் இருந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பிறகு அறிவிப்பார் என தகவல்கள் வெளியான சூழலில், தனக்கு இப்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற எண்ணமில்லை என திட்டவட்டமாக அறிவித்து விளக்கம் கொடுத்தார். இருப்பினும் அவர் ஓய்வு […]