டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம் தேதி வென்றது. இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிவாகை சூடியது. 2025 ஐசிசி சாம்பியன்ஸ் போட்டியை பாகிஸ்தான் நடத்தி இருந்தாலும் இந்திய அணி பங்கேற்ற அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற்றன. ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு முன்னதாக முதற்பரிசு தொகை 2.24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய விராட் கோலி ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் தோல்வி அடைந்தது பற்றியும், அணியில் இளம் வீரர்களுடன் விளையாடுவது பற்றியும் சில விஷயங்களை பேசினார். இது குறித்து பேசிய […]
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது. இந்த போட்டி முடிந்த பிறகு அணியின் கேப்டன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. போட்டி முடிந்த பிறகு ஓய்வு அறிவித்துவிடுவாரோ என ரசிகர்கள் கவலையில் […]
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நாளை மறுநாள் (மார்ச் 9) துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்று ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்று குழு A இல் முதலிடத்தைப் பிடித்த இந்தியா, அரையிறுதியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கள் வெற்றிப் பயணத்தை நான்கு போட்டிகளாக மாற்றி தற்போது இறுதிப் போட்டிக்கு […]
துபாய் : 37 வயதான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு குறித்த தகவல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஓடி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே, கடந்த ஆண்டு பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் முடிந்த பிறகு அவர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவிப்பார் என தகவல்கள் தீயாக பரவியது. அதன்பிறகு ஓய்வு பெறுவதற்கு இப்போது எண்ணமில்லை..ஓய்வு என்பது என்னுடைய தனிப்பட்ட விஷயம்..நான் கிரிக்கெட் விளையாட தயாராக இருக்கிறேன்” எனவும் பேசி […]
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE – Central Board of Secondary Education) அங்கீகாரம் பெறாமல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா முழுக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கின. இப்படியான சூழலில் நடுவிக்காடு தனியார் பள்ளி மாணவர்களுக்கு இறுதி வரையில் சிபிஎஸ்இ […]
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை கராச்சி மைதானத்தில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. இதனை அடுத்து பிசிசிஐ-ல் பல்வேறு கடும் […]
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியுடன் நாளை (பிப்ரவரி 19 ஆம் தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 20 அன்று இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே ஒரு போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் யார் விளையாடுவார்கள் என்று கணிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப், ஷமி அணியில் இடம்பெறுவார்கள் என்றும், ஆல் ரவுண்டர் பட்டியலில் பாண்டியா, ஜடேஜா இருப்பார்கள் எனவும் […]
கராச்சி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த வருட போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) நடத்துகிறது. பெரும்பாலான போட்டிகள் பாகிஸ்தானில் லாகூர், கராச்சி, ராவல் பிண்டி மைதானத்தில் நடைபெற உள்ளன. இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், இந்திய வீரர்களின் பாதுகாப்பு கருதி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்த காரணத்தால் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. இதனால் ஆரம்பம் முதலே […]
சென்னை : நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்றும், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று திஸ்போர்ட்ஸ்டாக் செய்தி வெளிட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் பும்ரா அணியின் தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் […]
டெல்லி : இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என சவால் விடும் வகையில் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” நாங்கள் இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறோம். இந்தியாவிடம் நாங்கள் தோல்வி அடைந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. இந்தியாவிடம் நாங்கள் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. ஆனால், இந்த நேரத்தில் நான் சொல்லி கொள்ள விரும்புவது என்னவென்றால், நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபியின் […]
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே, 4-1 என்ற கணக்கில் டி20 போட்டியை கைப்பற்றிய நிலையில், அதனைத்தொடர்ந்து அடுத்ததாக ஒரு நாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இருப்பினும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில், அந்த போட்டி இன்று (பிப்ரவரி 12) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த சூழலில், இங்கிலாந்து […]
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று (பிப்ரவரி 12, 2025) நீதிமன்றம் தீர்ப்பை வழங்க உள்ளது. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் […]
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன. பிப்ரவரி 20-ல் வங்கதேச கிரிக்கெட் அணியையும், பிப். 23-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும், மார்ச் 2-ல் நியூசிலாந்து கிரிக்கெட் அணியையும் ரோஹித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற கேள்வி தற்போது […]
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. மீதம் உள்ள ஒரு போட்டி மட்டும் நாளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் (பிப்ரவரி 9) ஒடிசா மாநிலம் கட்டாக் கிரிக்கெட் மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் […]
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்றது. கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு முன்னதாக 2007-ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்தியா கோப்பயை வென்றிருந்தது. அடுத்ததாக, 2007 முதல் 2024 வரை, இந்திய அணி பலமுறை முயற்சி செய்தும் கோப்பையை வெல்லமுடியவில்லை. எனவே, உலகக்கோப்பை வெல்வது என்பது இந்திய அணிக்கு ஒரு கனவாக இருந்தது. அந்த கனவு […]
பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஜனவரி 28ம் தேதி விற்பனை செய்யப்பட்டது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. துபாய் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் குளோபல் ஸ்போர்ட்ஸ் டிராவல் அல்லது விர்ஜின் மெகாஸ்டோர் வழியாக ஆன்லைனில் விற்கப்படுகின்றன. கடந்த 3ம் தேதி மாலை 4 மணி முதல் விற்பனைக்கு வந்த உடனே டிக்கெட்டுகள் அனைத்தும் […]
நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த 3 போட்டிகளை அடுத்து உடனடியாக துபாயில் (பாகிஸ்தான்) நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இறுதியாக நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்ற […]
சென்னை : இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு 7 மணி அளவில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்திற்கு எதிரான 2வது மற்றும் 3வது டி20 போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியின் போது ஃபீல்டிங் செய்யும்போது ஏற்பட்ட வலி காரணமாக, 2வது போட்டியில் ரிங்கு சிங்குக்கு மாற்றாக ரமன்தீப் சிங் […]
பாகிஸ்தான் : பொதுவாக, ஐசிசி நடத்தும் போட்டிகளில், நடத்தும் நாட்டின் பெயர் மற்றும் லோகோவின் கீழ் அணிகளில் விளையாடும் வீரர்கள் ஜெர்சியில் இடம்பெறும். எனவே, 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ள காரணத்தால் பாகிஸ்தான் அணி பெயரை மற்ற அணிகள் தங்களுடைய ஜெர்சியில் அச்சிடப்பட்டு விளையாடவேண்டும் என்ற சூழ்நிலை நிலவியது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காமல், துபாயில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமே பங்கேற்க இருப்பதால், ஜெர்சியில் […]