துபாய்:ஆசிய கோப்பை T20 2025 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணி, விருது வழங்கும் நிகழ்ச்சியில் கோப்பை ஏற்க மறுத்தது. செப்டம்பர் 28 அன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்தில் நடந்த இந்த உச்சமோதலில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 146 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்தது. இதை விரட்டிய இந்தியா, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 150 ரன்கள் குவித்து 6 பந்துகள் முன்பே இலக்கை அடைந்தது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோஹ்சின் நக்வி கோப்பையை வழங்குவதற்காக மேடையேறியபோது, இந்திய அணி அதை ஏற்க மறுத்தது. போட்டி முடிந்து ஒரு மணி நேரம் கழித்து தொடங்கிய விருது நிகழ்ச்சி, இந்த மறுப்பால் தாமதமடைந்து, கோப்பை இந்திய அணிக்கு கிடைக்காமல் போயிற்று. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், போட்டிக்குப் பிறகு, “இது சர்ச்சை என்று சொல்ல விரும்பவில்லை. வீரர்கள் கோப்பை புகைப்படங்கள் பதிவிட்டுள்ளனர்.
அது மட்டுமின்றி, ரோஹித் சர்மா மற்றும் கெளதம் கம்பீர் குறித்தும் சில விஷயங்களை பேசினார். “கவுதி பாய் (கெளதம் கம்பீர்) உடனான எனது உறவு, சிறிய-பெரிய அண்ணன் தம்பி போன்றது. KKR-ல் 4 ஆண்டுகள் ஒன்றாக விளையாடியுள்ளோம். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டோம். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ரோஹித் தலைமையில் விளையாடியிருந்தாலும், KKR-ல் கவுதி பாய் கேப்டனாக இருந்தபோது, அவரது தலைமைத்துவத்திலிருந்து சில தந்திரங்களையும் கற்றேன். மைதானத்தில் ஒரு வீரரின் மனநிலையை அவர் புரிந்து கொள்கிறார். ஒரு வீரர் சிறப்பாக விளையாடும்போது அவரை முன்னேற்றுவது, பாதுகாப்பது எப்படி என்பது அவருக்கு தெரியும்,” என்று கூறினார்.
அவர் மேலும், கூறுகையில் “எனக்கு எல்லாம் தெரியும் என்று கவுதி பாய் இருக்கிறார். நான் மைதானத்தில் இருக்கும்போது, ஒவ்வொரு ஓவர் முடிந்த பிறகு அவரைப் பார்ப்பேன். அவர் ஏதாவது சைகை செய்தால், யோசிக்காமல் அதைச் செய்வேன். மைதானத்தில் என் மனதில் பல விஷயங்கள் ஓடும் யாரை பந்து வீச வைப்பது, எந்த பீல்டிங் அமைப்பது என்று. ஆனால், வெளியே இருக்கும் கவுதி பாய் சைகை செய்யும்போது, அது வேறு கோணத்தில் இருக்கும். அவரை முழுமையாக நம்புகிறேன். எங்களுக்கு இடையே அப்படி ஒரு நம்பிக்கை உள்ளது,” என்று உருக்கமாக பகிர்ந்தார்.
