யோகி ஆதித்யநாத்துக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? – மு.க.ஸ்டாலின் கேள்வி

According to DMK leader Mk Stalin, Uttar Pradesh is the most vulnerable state for women in India.

இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் உத்தரப்பிரதேசம் தான் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழகத்தில் திமுகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதமரும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகின்றனர். தமிழகத்தையும், திமுகவையும் பற்றி பேச பிரதமர் மோடிக்கும், உ.பி. முதல்வருக்கும் எந்தவித தகுதியும் கிடையாது.

இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் உத்தரப்பிரதேசம் தான். பாஜக அரசு ஆளும் உத்தர பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பின் லட்சணத்தை நாடே அறியும். அங்கிருந்து வந்த யோகி ஆதித்யநாத், திமுக பற்றியும் தமிழகத்தை பற்றியும் பேச என்ன யோக்கியதை இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்ம இருப்பதாக முதலில் கூறியது ஓபிஎஸ் தான். தமிழகத்தில் மோடி எதிர்ப்பலையோடு முதல்வர் பழனிசாமி எதிர்ப்பலையும் வீசுகிறது என்றும் பொள்ளாச்சி கொடூரம் பற்றி பிரதமர் மோடி ஏன் கேட்கவில்லை? எனவும் மேட்டுப்பாளையத்தில் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் பேசியுள்ளார்.