நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தேஜஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் உணர்ச்சிவசப்பட்டதாக கங்கனா இணையத்தில் பதிவிட்டுள்ளார். கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தேஜஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை உத்தரப்பிரதேச உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து கண்டுகளித்தனர். இந்நிலையில், ‘தேஜஸ்’ திரைப்படத்தை பார்த்த உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் படம் பார்க்கும் போது அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என நடிகை […]
உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் , இன்று ஓர் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நீர் நிலைகளில் டால்பின்களின் எண்ணிக்கையானது கனிசமான அளவில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, டால்பின்களை உத்திர பிரதேச மாநில அரசு நீர்விலங்கு என அறிவித்தார். இந்த அறிவிப்பு விழாவில் அவர் பேசுகையில், உத்திர பிரதேசத்தில் உள்ள சம்பல், கங்கை, கெருவா, காக்ரா, ராப்தி மற்றும் யமுனா போன்ற இந்திய நதிகள் புகழ்பெற்ற டால்பின்களின் தாயகமாக […]
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால்,வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைன்ஸ் மைதானத்தில் இருந்து லக்னோ நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து,வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் கவுஷல்ராஜ் சர்மாவை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் PTI கூறுகையில்:”உபி முதல்வர் யோகி சனிக்கிழமை வாரணாசிக்கு வந்து காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்தார்.அதன்பின்னர்,வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை […]
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதே மைதானத்தில் உபி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் யோகி ஆதித்யநாத். உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார் யோகி ஆதித்யநாத். லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் ஆளுநர் ஆனந்தி பென படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். லக்னோவில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இவ்விழாவில் உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வராக கேசவ் பிரசாத் […]
இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் உத்தரப்பிரதேசம் தான் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழகத்தில் திமுகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதமரும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகின்றனர். தமிழகத்தையும், திமுகவையும் பற்றி பேச பிரதமர் மோடிக்கும், உ.பி. முதல்வருக்கும் எந்தவித தகுதியும் கிடையாது. இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் உத்தரப்பிரதேசம் தான். பாஜக அரசு ஆளும் உத்தர […]
உத்தரபிரதேசத்தில் இதுவரை 5,61,161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இதுவரை 5,32,349 பேர் குணமாகி 8,011 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், கோரக்பூரில் எய்ம்ஸில் நடைபெற்ற பிரச்சாரத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட முதல்வர் யோகி பேசுகையில், “கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற நாங்கள் ஒரு மாதம் தொலைவில் உள்ளோம். கொரோனா ஏற்கனவே மாநிலத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில், மாநில அரசாங்கத்தால் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து, உலக சுகாதார அமைப்பும் இதைப் பாராட்டியுள்ளது […]
தீபாவளிக்குப் பிறகு, உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு “மிஷன் ரோஸ்கர்” என்ற திட்டத்தை தொடங்கத் தயாராகி வருகிறது. இது வேலையற்றவர்களுக்கும்,வேலையை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமாகும். நவம்பர் 2020 முதல் 2021 மார்ச் வரை மாநிலத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் இலக்கை உத்தரபிரதேச அரசு நிர்ணயித்துள்ளது. இதனால், அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைக்கு விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அரசு முயற்சிகளின் உதவியுடன், தனியார் துறைக்கு பல புதிய வாய்ப்புகளும் […]
உத்திரபிரதேசத்தில் பாஜக சார்பில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு திரும்ப நாம் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தோம். ஆனால், காங்கிரஸ் தொழிலாளர்களுக்காக பேருந்து இயக்குவதாகக் கூறி சதி வேலையில் ஈடுபட்டது. காங்கிரஸ் சதி வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும், சாதி வெறுப்பையும் தூண்டி விடுகிறது என தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னாள் பணியாளர்களுக்கான குரூப் ‘சி’ பதவிகளில் இருப்பவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளார். இந்நிலையில், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று சேவைகளிலிருந்தும் ஓய்வு பெற்ற மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தகுதி பெறுவார்கள் என்று ஆதித்யநாத் தெரிவித்தார். இந்த வேலைக்கு தகுதி பெற ஒருவர் உத்தரபிரதேசத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு மட்டத்திலும் ‘கிடைமட்ட அடிப்படையில்’ இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இதற்கிடையில், உயிரிழந்த […]
ஹத்ராஸ் மாவட்டத்தை சார்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் பதினைந்து நாட்கள் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்துள்ளார்.
முதலமைச்சர் பதவியை யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்யுங்கள் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.மேலும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள பால்ராம்பூர் கிராமத்தில் இரண்டு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நேற்று 22 வயது பெண் உயிரிழந்துள்ளார்.இரண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவ நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் […]
உத்தரபிரதேச பெண்களின் பாதுகாப்பிற்கு முதல்வர் தான் பொறுப்பு என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட் செய்துள்ளார். உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் கும்பல் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று முதல்வர் ஆதித்யநாத் அரசாங்கத்தை குறித்து பேசினார். கடந்த செப்டம்பர்-14 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் நான்கு ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் […]
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரவுடி விகாஸ் துபே தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், இன்று விகாஸ் துபே இருந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, போலீசாருக்கும், ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், ரவுடிகளுடன் நடைபெற்ற மோதலில் […]
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, அவரது காலணியாலேயே அடிக்க வேண்டும் என்று தோன்றியதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பல்ஃகார் சென்றிருந்த யோகி ஆதித்யநாத், சத்ரபதி சிவாஜி புகைப்படத்துக்கு மாலை அணிவித்தார். அப்போது காலில் அணிந்திருந்த காலணிகளை அவர் கழற்றவில்லை. இதுகுறித்து சிவசேனா பத்திரிக்கையான சாமனாவில் எழுதியுள்ள உத்தவ் தாக்கரே, யோகி ஆதித்யநாத் யோகி அல்ல போகி என்று கூறியுள்ளார். சிவாஜி சிலைக்கு காலணியுடன் மாலை அணிவித்த போது, அவரது […]
3 நாள்கள் நடைபெறும் மகோத்சவம் விழா கோரக்பூரில் நாளை தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் மைதானத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கோரக்பூர் மகோத்சவத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.