மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் அதிமுக அல்ல என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்த்தில் பதிவிட்டுள்ளார். அதில், மக்களிடம் ஆதரவில்லை, தேர்தலில் படுதோல்வி உறுதி என்ற நிலையில், வழக்கம்போல பாஜக தனது அதிகாரத்தை பயன்படுத்தி தவறாகப் செயல்படுகிறது. மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் ஒன்றும் அதிமுக அல்ல. எங்களுக்கு அச்சமில்லை, துணிந்து எதிர்ப்போம். உங்கள் தப்புக் கணக்குக்கான தெளிவான பதிலை மக்களே ஏப்.6ல் வழங்குவர் என தெரிவித்துள்ளார்.
unknown node