வெண்ணெய் எது, சுண்ணாம்பு எது என்று வித்தியாசம் பார்க்க சாமானியருக்கு தெரியும் – ஓபிஎஸ்

AIADMK coordinator O. Panneerselvam has criticized the DMK for saying that many of its promises are unlikely to be fulfilled.

திமுகவின் பல வாக்குறுதிகள் நிறைவேற்ற சாத்தியம் இல்லாதவை என்பதுதான் உண்மை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்.

திமுக அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு தீர்வு காணும் வழிவகை இல்லாத நிதிநிலை அறிக்கை. சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள்.

திமுகவின் பல வாக்குறுதிகள் நிறைவேற்ற சாத்தியம் இல்லாதவை என்பதுதான் உண்மை. சாமானியர் நிரம்ப படித்தவராக இல்லது இருக்கலாம். ஆனால், வளமான பொது அறிவு பெற்றுள்ளார். வெண்ணெய் எது, சுண்ணாம்பு எது என்று வித்தியாசம் கண்டறிய சாமானியருக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.