திமுகவின் பல வாக்குறுதிகள் நிறைவேற்ற சாத்தியம் இல்லாதவை என்பதுதான் உண்மை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம். திமுக அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு தீர்வு காணும் வழிவகை இல்லாத நிதிநிலை அறிக்கை. சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள். திமுகவின் பல வாக்குறுதிகள் நிறைவேற்ற சாத்தியம் இல்லாதவை […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில். தமிழக சட்டப்பேரவை கடந்த 13ம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. கடந்த 13-ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல், 14-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 16-ஆம் தேதி முதல் பொது பட்ஜெட் மீதான விவாதம் நேற்றுவரை நடைபெற்றது. இந்த, இன்று தொடங்கியுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு அமைச்சர் […]
தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான இரண்டாம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி சென்னை வாலாஜா சளியில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது தமிழக அரசின் மாநில பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து, மறுநாள் 14ம் தேதி முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே […]
நிதிநிலை அறிக்கை என்பது பூனை எலியை கவ்வுவது போல உள்ளது என அதிமுக எம்எல்ஏ ஆர்.பி உதயகுமார் விமர்சனம். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கி, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாத கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், ஒரு அறிக்கையை தயார் செய்யும் போது, தாய் பூனை குட்டி பூனையை வாயில் கவ்வுவது போல் தாய் பாசத்தோடு இருக்க வேண்டும். ஆனால், […]
தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க சொன்னது ஒன்று, செய்திருப்பது வேறு என டிடிவி தினகரன் விமர்சனம். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்றவுடன் தமிழகத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் உயர்த்தும் அளவுக்கு தொலைநோக்கு பார்வை கொண்ட மிகப்பெரிய செயல்திட்டத்தை தமிழக அரசு வெளியிடும் என்று அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்ட எதிர்பார்ப்பு பொய்யாகி இருக்கிறது. ஏனெனில், வழக்கமான நிதிநிலை அறிக்கையில் இருந்து சில அம்சங்களைப் பிரித்தெடுத்து […]
கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை கல்லூரி புதிதாக தொடங்குவதற்கு முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு. இன்று இரண்டாவது நாள் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், வேளாண் மற்றும் உழவர்த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டை தாக்கல் உரையின்போது, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். கோவை மாவட்டம் வேளாண் பல்கலைக்கழகத்தில், தமிழ் வழியில் வேளாண்மை, தோட்டக்கலை கல்வி அறிமுகம் செய்யப்படும் […]
தமிழ்நாட்டின் நிதிநிலைமையை நன்கு அறிந்திருந்தும், ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக திமுக பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை. அந்த அறிக்கையில், ‘விடியலை நோக்கி’ என்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி, எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மாதம் ஒரு முறை மின் கட்டணம், முதியோர் உதவித் தொகை ரூ.1,500ஆக அதிகரிப்பு, கல்விக் கடன் ரத்து, நகைக் கடன் ரத்து, மகளிருக்கு மாதம் ரூ.1,000, 60 வயதிற்கு மேற்பட்டோரின் உதவித் தொகை […]
கொல்லிமலை மிளகு போன்ற சிறப்பு பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.அதில்,பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. இதற்கிடையில்,கொல்லிமலை மிளகு போன்ற சிறப்பு பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது: “ஈரோடு மஞ்சள்,மதுரை […]
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2வது இன்று தொடங்கிய நிலையில், வரலாற்றில் முதன்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று […]
காய்கறி அங்காடிகள் அமைக்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40% மானியம் அல்லது 2 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில்,தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.இந்த நிலையில், இன்று இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் […]
50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து புதுப்பொலிவுடன் செயல்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ.12 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு. தமிழகத்தில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், 50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து புதுப்பொலிவுடன் செயல்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ.12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசு நிதியில் அமைக்கப்படும். கடலூர், திண்டுக்கல், […]
விவசாயிகளின் புதிய வகை கரும்புகளை சாகுபடி செய்ய ஊக்குவிக்க ரூ. 2கோடி ஒதுக்கீடு. தமிழகத்தில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை டன் ஒன்றுக்கு ரூ.150 வழங்கப்படும். இதனால் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூ. 2750 இருந்து ரூ.2900 ஆக அதிகரிப்பு. சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு […]
நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில், பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு. இந்த திட்டம் 52 கோடியே 2 லட்சம் செலவில் ஒன்றிய மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும். நெல் ஜெயராமன் சேகரித்த […]
இலவச மின்சாரத்திட்டத்திற்கு ரூ.4508 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில்,இலவச மின்சாரத்திட்டத்திற்கு ரூ.4508 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது: “வழமான விவசாயத்திற்கு பாசன நீர் மிக முக்கியம்,தமிழ்நாட்டில் கிணறு,ஆழ்துறை கிணற்றில் உள்ள நீரை பம்பு […]
பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு. நேற்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதில், முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில், சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும். உணவு உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு […]
தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி, அந்த கூட்டத்தொடரில் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நேற்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிலையில், இன்று இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் […]
தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நேற்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை […]
தமிழகத்தில் முதல் முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நேற்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இன்று வேளாண்மைத் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்து கடந்த ஜூன் மாதம் […]
முதல் நிதிநிலை அறிக்கையிலேயே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக தமிழக முதலமைச்சரை பாராட்டிய கேஎஸ் அழகிரி. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த நிதிநிலை அறிக்கை, தேர்தல் நேரத்தில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளும் தீவிரமான முயற்சிகளை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் 2.63 கோடி இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 3 வரியை குறைத்ததன் […]
வளர்ச்சியோடு சூழலியல் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்று கனிமொழி எம்.பி. ட்வீட். இதுகுறித்து திமுக மகளிரணி தலைவரும், எம்பியுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் சுற்றுச் சூழலை மேம்படுத்த ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள இயக்கம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது. வளர்ச்சியோடு சூழலியல் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், […]