சென்னை : நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், கிருஷ்ணர் பக்தர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி எனப்படும் இந்த பண்டிகை, திருஷ்டி பூஜையில் பகவான் கிருஷ்ணரின் பிறப்பை கொண்டாடும் பண்டிகையாகும். இந்நன்னாளில் பிரதமர் மோடி முதல் தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். பிரதமர் மோடி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள […]
மக்களவை தேர்தல் : மக்களவை தேர்தல் முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. தேர்தல் ஆணையத்தின் தரவுகள் படி, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 2024 மக்களவை தேர்தலில் 240 இடங்களில் வெற்றி பெற்று, 36.56% வாக்குகளை பெற்றுள்ளது. இந்நிலையில், பாஜக வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது அறிக்கையில், “18வது மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையின்கீழ், தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ள […]
சசிகலாவுடனான சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அறிஞர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். அங்கு சசிகலாவும் வந்திருந்த நிலையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். பன்னீர்செல்வம் உடனான சந்திப்பு குறித்து சசிகலா கூறும்போது, “குடும்பத்தில் ஒருவர் என்ற முறையில் இந்த சந்திப்பு நடந்தது” என கூறினார். பின்னர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், “அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு கிளம்பும் […]
இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்ற நிலையில், 10 விழுக்காட்டிற்கும் குறைவான காலிப் பணியிடங்களுக்கு ‘டிஎன்பிஎஸ்சி’ அறிவிப்பு வெளியிட்டு இருப்பது யானை பசிக்கு சோளப் பொறி போடுவது போல் அமைந்துள்ளது என 6,244 இடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு குறித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் இருந்தால்தான் மக்களின் திட்டங்கள் விரைவில் மக்களை சென்றடையும். ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலான திமுக ஆட்சியில் […]
உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு நாளை ஜன. 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக ராமர் பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உத்தரப்பிரதேசம், குஜராத், புதுச்சேரி என 16 க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களுக்கும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்கும் வகையில், நாளை […]
அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர்பேடு உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தனி நீதிபதி விதித்த தடை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருந்து. இது, ஓபிஎஸ் தரப்பினருக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. இருப்பினும், இதுதொடர்பாக உரிமை மனு தாக்கல் செய்யலாம் என ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு அறிவுறுத்தியது. அதிமுக நல்ல இருக்கக்கூடாது, நாசமா போகவேண்டும் என்பது தான் ஓபிஎஸ்-யின் நோக்கம். அதை தான் செய்துகொண்டு இருக்கிறார் […]
15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இன்றும் 2வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இந்த […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் பணம் என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதுவும், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா இல்லா அட்டைதாரர்கள், தவிர அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளினை தமிழக […]
அதிமுக கட்சி பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கொடி, சின்னம், பெயர் மற்றும் லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், இதற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்துவது […]
அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடி, சின்னம், பெயர் மற்றும் லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், இதனை குறிப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. […]
அதிமுகவின் கொடி, பெயர் மற்றும் சின்னத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டு, அப்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்தன. கடந்த ஆண்டு ஜூலை மாத பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பிறகு உள்கட்சி தேர்தல் மூலம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார். […]
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி, பதில் நேரத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, 10 முறை கடிதம் அளித்துள்ளோம். 3 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்க சொன்னதையும் நீங்கள் செய்யவில்லை. அதாவது, ஓபிஎஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய […]
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து, மறைந்த முக்கிய பிரமுகர்கள் பிரகாஷ் சிங் பாதல், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேளாண் அறிவியலாளர் எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தற்போது சட்டப்பேரவை கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனிடையே, சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் […]
அதிமுக தலைவர்கள் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர் விமர்னங்களை கூறி வந்ததை அடுத்து , அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூடி கலந்தாலோசித்து இனி , அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என்றும் , தேசிய அளவிலான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்தும் அதிமுக விலகுவதாக அறிவித்தது. இந்த முடிவை அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்து இருந்தாலும், அடுத்ததாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இதனை உறுதியாக […]
கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டிய விவகாரம் தற்போது மிகப்பெரிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அதிகாரிகள், காவிரி ஒழுங்கற்று வாரியம், உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் தேவைகளை கருத்தில் […]
பழனிசாமி பெயருக்கு எதுவும் மத்திய அரசால் அனுப்பப்படவில்லை என ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு. தொண்டர்கள் மூலம் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இடையில் பல்வேறு பிரச்சனைகளை எடப்பாடி பழனிசாமி உருவாக்கினார் என்றும் ஓபிஎஸ் குற்றசாட்டினார். மேலும், அதிமுகவின் அமைப்பு ரீதியான தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் எந்த முடிவை எடுத்திருக்கிறதோ […]
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரை குறிப்பிட்டு அதிமுகவுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கம் தொடர்பாக சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். அதில், ரிமோட் வாக்குப்பதிவு முறை தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திற்கு மாநில தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஜனவரி 16-ல் அரசியல் கட்சிகளுக்கு செயல்முறை […]
அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் என ஜெயக்குமார் பேட்டி. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளியோர் பங்கேற்றனர். மக்களவை தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் கூட்டணி, அதிமுக வளர்ச்சி பணிகள், திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், […]
ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு. சென்னையில் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது, ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என்று பெரும்பாலான நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில், நத்தம் விஸ்வநாதன் மட்டுமின்றி பெரும்பாலான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என தெரிவித்தாக கூறப்படுகிறது. பொருட்களில் போலி இருப்பது போன்று அரசியலில் […]
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், தலைமை அலுவலகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக பெயர் மற்றும் கொடியை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமையகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், கட்சியின் பெயர், கொடி பயன்படுத்துவதாக புகார் எழுந்ததை அடுத்து தலைமை அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.