தமிழகத்திற்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு-மத்திய அரசு உத்தரவு...!

The Central Government has ordered to allocate an additional 900 metric tons of oxygen to Tamil Nadu.

தமிழகத்திற்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மேலும்,ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதன்காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.எனவே, தமிழகத்திற்கு தினசரி வழங்கும் ஆக்சிஜன் அளவைவிட கூடுதலாக 180 டன் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திமுக எம்பி டி.ஆர் பாலு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில்,மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,தமிழகத்திற்கு 180 டன் கூடுதலாக அதாவது மொத்தம் 900 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும்,மஹாராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு மருத்துவ ஆக்சிஜனை அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.