மருத்துவ ஆக்சிஜனை தயாராக வைக்க அறிவுறுத்தல்!

மருத்துவமனையில் ஆக்சிஜனை தயாராக வைத்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல். மருத்துவமனைகளில் ஆக்சிஜனை போதிய இருப்பு வைத்திருக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களின் கையிருப்பு மற்றும் விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்யுமாறும், புதிய வகை கொரோனா திரிபு பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மக்களே கவனம்…கடந்த 2 வாரத்தில் ICU வில் இருப்போர் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரிப்பு!

தமிழகத்தில் கடந்த 2 வாரத்தில் ஐசியூவில் இருப்போர் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அந்தவகையில்,தமிழகம் முழுவதும், 23,888 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ள நிலையில்,29 பேர் உயிரிழந்ததாக நேற்று தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும் 15,036 பேர் கொரோனாவிலிருந்து நலம் பெற்றுள்ள நிலையில், 1,61,171 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும்,சென்னையில் ஒரே நாளில் … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை – ஹரியானா அரசு!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மாநிலத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.  உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக்கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவில் அதிக அளவில் பரவ தொடங்கியது. இந்த இரண்டாம் அலையின் பொழுது நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிக அளவில் ஏற்பட்டது. இந்நிலையில், சட்டசபையில் வைத்து மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்புகள் … Read more

ஸ்டெர்லைட் ஆதரவு போராட்ட வழக்கு – இடைக்காலத்தடை விதித்த உயர்நீதிமன்றம் கிளை

ஸ்டெர்லைட்டில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிகோரி போராடியவர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை விதித்த நீதிமன்றம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் அலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிகோரி போராடியவர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது. சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்யவும் மதுரை இல்லை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் துணைத்தலைவர் சுமதி உள்பட பலர் தாக்கல் செய்த வழக்கில் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் பட்டியலை அளிக்க வேண்டும் – மத்திய அரசு

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் பற்றிய விவரங்களை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அளிக்க வேண்டும் என மத்திய அரசு கடிதம். ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் பட்டியலை அளிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மாநில அரசுகளிடம் இருந்து வரும் தகவல்களை திரட்டி, நாடாளுமன்ற அவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை என்று மத்திய … Read more

ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதி நீட்டிக்கும் அவசியம் இல்லை – கே.பாலகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதி நீட்டிக்கும் அவசியம் இல்லை என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது  அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த காலகட்டங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை போக்க பல்வேறு தனியார் அமைப்புகள்  ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கி வந்தது. ஸ்டெர்லைட் ஆலை  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தர தயாராக இருப்பதாகவும் அதற்கு அனுமதி … Read more

ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் சீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் சமீபத்தில் தினந்தோறும் 3,000 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஏன் உடனடியாக மூட வேண்டும் என்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என மருத்துவ வல்லுநர்கள் கூறப்படும் நிலையில், … Read more

கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையில் தாக்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து வரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் குறைந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் விரைவில் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த கொரோனா மூன்றாம் அலையில் … Read more

கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாமல் தோல்வி அடைந்தவர் – மத்திய மந்திரி!

மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாமல் தோல்வி அடைந்தவர் கெஜ்ரிவால். இவர் வீடுகளுக்கு ரேஷன் பொருள் வழங்குவது குறித்து பேசுவதாக மத்திய மந்திரி விமர்சனம். தலைநகர் டெல்லியில் தேர்தல் நடந்த பொழுது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சி அமைத்தது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று … Read more

சூனியக்காரி என்று கிராம மக்களால் விரட்டப்பட்ட குடும்பம்…! இன்று கிராம மக்களுக்கு உதவிகரம் நீட்டும் அதே குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்..!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பதாக சூனியக்காரி என்று கூறி கிராமத்தாரால் விரட்டியடிக்கப்பட்ட குடும்பம்.  இளம்பெண் சுர்கி, வாடகை வாகனத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி சென்று அந்த கிராம மக்களுக்கு உதவி வருகிறார். மேற்கு வங்கத்தில், ஒரு கிராமத்தில் வசித்த தாய் மற்றும் மகள்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பதாக சூனியக்காரி என்று கூறி விரட்டியடிக்கப்பட்டனர். இதனையடுத்து, அந்த குடும்பம் வேறு கிராமத்தில் குடிபெயர்ந்தது. இந்நிலையில், தனது சொந்த கிராம மக்கள் கொரோனாவால் உயிரிழப்பதை தாங்க முடியாத அந்த … Read more