சென்னை : நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்டது குறித்து அஜித்குமாரன் நன்றி தெரிவிக்கும் வகையில், தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அஜித் கூறியதாவது ” இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். […]
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம் வரிப்பகிர்வு தொகையை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம், ரூ.1,73,030 கோடி ரூபாயனது 2025 ஜனவரி மாதத்திற்கு மாநில வாரியாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2024இல் இந்த வரிப்பகிர்வு ரூ.89,086 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த முறை மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த திட்டங்களுக்கு செலவிட இந்த முறை அதிக தொகை ஒதுக்கீடு […]
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நேற்று திடீரென மத்திய அரசு சார்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது. அதில், இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசுடன் பலமுறை கலந்து ஆலோசித்த போதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குறிப்பாக கடந்த 2024 பிப்ரவரி மாதம் ஏலம் தொடங்கிய போதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு எடுத்ததாகவும் நவம்பர் […]
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் எழுந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு டங்ஸ்டர் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவியிலும் , தீர்மானமும் […]
டெல்லி : கேரளாவில் அண்மையில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட இளைஞருக்கு அதன் புதிய வகையான கிளேட் 1 வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யபட்டது. வேகமாகப் பரவக்கூடிய இந்த வகை குரங்கு அம்மை, இந்தியாவில்| கண்டறியப்படுவது இதுவே முதல்முறை என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், குரங்கு அம்மை தடுப்பு குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வா சந்திரா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று […]
கொல்கத்தா : கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை தற்போதைய சூழலில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்க வேண்டும் என நாடெங்கிலும் குரல்கள் வலுத்து வருகின்றன. மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மத்திய அரசுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். அதில், பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க […]
மதுரை : எய்ம்ஸ் எப்போது கட்டிமுடிக்கப்டும் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதாக மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அறிவித்தது. பின்னர், 2018ஆம் ஆண்டு மதுரை தோப்பூர் பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதனை அடுத்து , தற்போது (2024) வரையில் மதுரை எய்ம்ஸ் கட்டிமுடிக்கப்படவில்லை. இதுகுறித்து, மாநில அரசு (திமுக) பலமுறை மத்திய அரசிடம் […]
டெல்லி : விவசாயிகளுக்கு அதிக பயன், மகசூல் தரக்கூடிய 109 பயிர் ரகங்களை இந்திய வேளாண் ஆராய்ச்சியாளர்கள் (Indian Agricultural Research Institute) கண்டறிந்து இருந்தனர். அதனை நேற்று பிரதமர் மோடி விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம்விவசாயிகளின் பயிர் உற்பத்தியை அதிகரிக்க செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். டெல்லியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் பிரதமர் மோடி 109 பயிர் ரகங்களை வெளியிட்டார். இதில், 34 பயிர் வகைகள் 27 தோட்டப்பயிர்கள் ஆகியவை அடங்கும். […]
டெல்லி : கடந்த ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாட்டின் நிதிநிலை நன்றாக இருப்பதாக மத்திய அரசு கூறி வந்ததால், நிச்சயம் பெரிய அளவில் நடுத்தர மக்கள் மத்தியில் வரிச்சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது. ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரையில் வருமானம் பெறுவோர் வருமானவரி கட்டவேண்டியதில்லை. மற்ற வரி விகிதங்கள் பின்வருமாறு… புதிய வருமான வரி விகிதம் : […]
சென்னை : மாற்று திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுகள் தனி நபர் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படஉள்ளது. தனிநபர் பிரிவுகளில் 5 பிரிவுகளின் கீழும், அமைப்பு பிரிவுகளின் கீழ் 8 பிரிவுகளின் கீழும் விருதுகள் வழங்ப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக […]
மத்திய பிரதேசம் : ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்) எனும் இந்துத்துவா அமைப்பில் மத்திய அரசு ஊழியர்கள் உறுப்பினராக இணைந்து பணியாற்ற கூடாது என 1966ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த தடையை அண்மையில் மத்திய அரசு நீக்கியது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த ஆர்எஸ்எஸ் தடை விவகாரம் குறித்து முன்னதாக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் கடந்த 2023இல் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் புருஷோத்தம் குப்தா என்பவர்,1966 ஆம் […]
சு.வெங்கடேசன்: பொதுவாகவே அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்க கூடாது என்பது அரசு விதி. மத்திய சிவில் சேவைகள் (நடத்தை) விதி 1964இன் படி இது அமலில் இருக்கிறது. இந்த விதியின் கீழ் RSS எனும் இந்துவதுவா இயக்கத்திலும் மத்திய அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்க கூடாது என்பது அரசு விதி. ஆனால் அது தற்போது தளர்த்தப்பட்டு இருப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அவர் தனது எக்ஸ் சமூக வலைதள […]
சென்னை: ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்தங்கள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்திருத்தம் கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது. அதன்படி இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்று மற்றம் செய்யப்பட்டது. அதே போல, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்றும், இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என்றும் மாற்றம் செய்யப்பட்டு அந்த சட்டப்பிரிவில் […]
டெல்லி: நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. இந்த புதிய வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணை நடைபெற்று வருகிறது இன்று நடைபெற்ற விசாரணையில்,நீட் மறுதேர்வு குறித்த மாணவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் , நீட் தேர்வில் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே நீட் நுழைவு தேர்வு பற்றி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று நீதிபதி அமர்வு உத்தரவிட்டு இருந்தது. அதனை […]
டெல்லி: கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசு புதிய தொலைதொடர்பு சட்டம் 2023ஐ அமல்படுத்தியது. இந்த சட்டதிருத்தத்தின் படி, தொலைத்தொடர்பு தொடர்பான பல்வேறு விதிகள் அமலுக்கு வந்தன. அதில் குறிப்பாக பயனாளர் ஒருவர் அவரது அடையாளத்தை கொண்டு 9 சிம்கார்டுகள் மட்டுமே வாங்கி கொள்ள முடியம். எத்தனை சிம் கார்டுகள் வாங்கலாம்.? அதனை மீறினால் அபராதம் , அதன் மூலம் குற்றம் நிகழ்ந்தால் சிறை தண்டனை என கடுமையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜம்மு […]
டெல்லி: ஜூன் 25ஆம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் நாடு முழுவதும் அவசரநிலை எனும் எமெர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது நாட்டில் நிலவிய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்பு 352வது பிரிவானது செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு எதிரான அனைத்து செயல்பாடுகளும் தடை செய்யப்பட்டு இருந்தன. ஜூன் 25, 1975 அன்று இந்திராகாந்தி ஆலோசனையின் […]
டெல்லி: தங்கள் செய்தி நிறுவனம் பற்றி தவறாக தகவல் பதிவிடப்பட்டு இருந்தது என கூறி விக்கிபீடியா மீது ANI செய்தி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியவில் பிரபலமாக உள்ள முன்னனி பத்திரிகை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ANI செய்தி நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓர் அவதூறு வழக்கை பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. உலகளாவிய தகவல் களஞ்சியமாக செயல்படும் விக்கிபீடீயா எனும் நிறுவனம் மீது தான் ANI அவதூறு வழக்கை பதிவு […]
MPSC ஆட்சேர்ப்பு 2024 : மகாராஷ்டிரா பொது சேவை ஆணையம், 114 சிவில் நீதிபதிகளை பணியமர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான mpsc.gov.in இல் விரிவான தகவல்களைக் கண்டுபிடித்து இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஜூன் 24, 2024 அன்று தொடங்கியது மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 8, 2024 ஆகும். கல்வி தகுதி & வயது வரம்பு : MPSC […]
Salary Hike : வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு மானிய திட்டம் நீட்டிப்பு, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. […]
மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரி மாநிலத்தில் வரும் 10-ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்” புதுச்சேரி மாநிலத்திற்கு இதுநாள்வரையிலும் மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்காதது, மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காதது, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் புதுச்சேரிக்கென உரிய இடஒதுக்கீடு வழங்காதது. புதுச்சேரியை […]