நவ.19 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

The Cabinet meeting, chaired by Chief Minister MK Stalin, will be held on November 19.

தமிழகம்:முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,அண்மையில் பெய்த மழையின் காரணமாக தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக,கன்னியாக்குமரி மாவட்டத்தில் தற்போது மழை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்அமைச்சரவைக்கூட்டம்வருகின்ற நவம்பர்19 ஆம்தேதிவெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில்,மழை வெள்ள சேதம் குறித்தும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நிதி அளிப்பது குறித்தும் அமைச்சர்களுடன் முதல்வர்ஸ்டாலின்அவர்கள் ஆலோசித்து ஒப்புதல் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மேலும்,இக்கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து கலந்தாலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.