தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்தது. அந்த வகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது. தென்காசி, தேனி, மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர் திண்டுக்கல், […]
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தீப திருவிழா காரணமாகதிருவண்ணாமலையில் மட்டும் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதியை ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2024-ஐ சமீபத்தில் அறிவித்தது. இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய […]
இந்தியா டுடே நடத்திய ஆய்வில், 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம். இந்தியா டுடே நடத்திய ஆய்வில், 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆய்வில் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், நிர்வாகம் போன்ற அளவீடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி , தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறுவதால், நவம்பர் 20 முதல் 22ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதோடு, வளிமண்டல குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மூலமாகவும், வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது கொஞ்சம் மழை ஓய்ந்துள்ளளது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய […]
பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 4 பேர் இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். அங்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் அங்கு வாழ இயலாத சூழலால் இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே, 100-க்கும் மேற்பட்டோர் மண்டபம் அகதிகள் […]
விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என மநீம அறிக்கை. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 33 மாநிலங்களுக்கு 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு ரூ.33 […]
தமிழகத்தில் ஆப்பிளுக்கு இணையாக விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி விலை தற்போது ரூ.30 அளவில் குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை உயர்வாகும்.ஏனெனில், தக்காளி விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்து பல பகுதிகளில் சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால்,கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் […]
தமிழகத்தில் இன்று சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.குறிப்பாக, சென்னையில் இன்று காலை முதலே செல இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில்,ஈரோடு,சேலம்,நாமக்கல்,கள்ளக்குறிச்சி,பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர புதுச்சேரி,காரைக்கலில் இன்று மிதமான […]
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளுக்கு நாளை முதல் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி […]
தமிழகம்:மதிமுக கட்சியின் தலைமைச்செயலாளர் துரை வைகோ அவர்கள், மேற்கொள்ள வேண்டிய பணிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில்,கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள்,அரசியல் ஆலோசனைக் குழு,அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலையச் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது,கட்சியின் நிர்வாகிகளிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதில்,துரை வைகோவுக்கு பெரும்பான்மையான வாக்கு கிடைத்தது.இதனால்,மதிமுக தலைமை கழக செயலாளராக தனது மகன் […]
தமிழகம்:முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,அண்மையில் பெய்த மழையின் காரணமாக தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக,கன்னியாக்குமரி மாவட்டத்தில் தற்போது மழை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில்,மழை வெள்ள […]
தமிழகம்:நாடு முழுவதும் 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதைக் கொண்டாடுகிற வகையில் பாஜக ஈடுபட்டு வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கொரோனா பேரழிவை மூடி மறைக்கவே 100 கோடி தடுப்பூசிகள் போட்டதைக் கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். இத்தகைய பிரச்சாரங்களின் மூலமாக பாஜக அரசின் இமாலயத் தவறுகளை மூடி மறைத்துவிட முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் […]
மதுரை:சிறப்பு ரயில்களை ரெகுலர் ரயில்களாக ஆக்கும் பணி தொடங்கியதாகவும், ஏழு நாட்களில் பணி முடியும் என்றும் எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இனி முதியோர் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.இது நீண்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்களாக அறிவிக்கப்பட்டவற்றை சாதாரண இரயில்களாக மாற்ற வேண்டும் என்றும், முதியோர் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் மீண்டும் வழங்க வேண்டும் […]
இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, உள்துறை அமைச்சகம், இந்தியில் மட்டுமே கடிதங்களை அனுப்பி வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டு இளைஞர்கள், ஆங்கிலம் நன்கு படித்து, உலகம் முழுமையும் வேலை வாய்ப்புகளைப் பெற்று முன்னேறி வருகின்றார்கள். ஆங்கிலம் படிக்காத வட இந்தியர்கள், தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருகின்றார்கள்.வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் அயல்நாட்டு மொழி என்றால், நமக்கு இந்தியும் அயல்நாட்டு மொழிதான்.எந்தத் காலத்திலும், இந்திக்குத் தமிழ்நாட்டில் இடம் கொடுத்துவிடக் கூடாது என்று மதிமுக […]
தமிழகம்:உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார திட்டங்களுக்காக மத்திய நிதி அமைச்சகமானது, தமிழகத்துக்கு ரூ.805 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பதினைந்தாவது நிதிக் குழு (FC-XV) 2021-22 முதல் 2025-26 வரையிலான தனது அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.4,27,911 கோடி மானியம் வழங்கப் பரிந்துரைத்துள்ளது. ஆணையம் பரிந்துரைத்த மானியங்களில் ரூ.70,051 கோடி சுகாதார மானியங்களும் அடங்கும். இந்த தொகையில் ரூ.43,928 கோடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ரூ.26,123 கோடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,19 மாநிலங்களின் ஊரக […]
தமிழகம்:காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் அதிக கனமழை பெய்யும் என்பதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்க கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி,தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் கனமழை முதல் அதிக […]
தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி,விழுப்புரம் ,சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும்,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் […]
சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து, அவிநாசி போலீசாருக்கு, மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கைது நடவடிக்கைக்கு ஆளாகி உள்ள சம்பவம் ஆனது மக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில் சம்பவத்தையடுத்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளி பின்பற்றி நடத்தப்பட்ட கூட்டத்தில், டி.எஸ்.பி., பாஸ்கர், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,கள் மற்றும் போலீசார் பங்கேற்ற கூட்டத்தில் திருப்பூர் கூடுதல்எஸ்.பி., ஜெயச்சந்திரன், அவிநாசி போலீசாருக்கு […]
மக்க்ள் ஊரடங்கு இன்று காலை 5 மணியோடு முடிவடைந்ததை அடுத்து தமிழகம் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு இன்று காலை 5 மணியுடன் முடிந்ததை தொடர்ந்து அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கின.இருந்த போதிலும் சென்னையில் முக்கிய இடங்களுக்கு குறைந்த அளவில் மட்டுமே பேருந்துகள் தற்போது இயங்கப்படுகிறது.மேலும் மதுரை போன்ற பிற மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
வடமேற்கு வங்க கடல் மற்றும் ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் பலத்த தரை காற்று வீசும் என்பதால் தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி […]