டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய துறைகளின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதில், விவசாயத்திற்கு மட்டுமே சுமார் ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவுபெற்ற பிறகு, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார். விவசாயம் சார்ந்த பல்வேறு […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, பொன்முடி, கே.என்.நேரு, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பாரிஸ் பயணம் மேற்கொண்டுள்ளதால் அமைச்சர் உதயநிதி இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்க பயணம் […]
டெல்லி : பிரதமர் மோடி தலைமையில், முதல் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் மோடி தலைமையில் முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ராஜ்நாத், அமித்ஷா, நட்டா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில், புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்து, இது முதல் மத்திய அமைச்சரவை கூட்டம் என்பதால், முதல் 100 நாள்களுக்கான செயல்திட்டம், […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டான இடைக்கால பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். நாடாளுமன்றம் வருவதற்கு முன்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.! எகிறும் எதிர்பார்ப்புகள்… இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் […]
ஜனவரி 23ஆம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். ஜனவரி 23-ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல், சட்டமன்ற கூட்டத் தொடரை எப்போது கூட்டுவது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரியார் பல்கலை. துணைவேந்தர் விசாரணைக்கு தடை..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்.17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், சட்டப்பேரவையில் விவாதிக்க உள்ள விவகாரங்கள் தொடர்பாக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட உள்ளது. கடந்த மாதம் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், மீண்டும் இன்று அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் சூதாட்ட […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் இடையே நாட்டின் பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், அரசின் சில முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்க்கு முன்னதாக கடந்த செப்-21 ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் வரைவு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக பட்ஜெட், தொழில் வளர்ச்சி , மின்விநியோகத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக உள்ளதாகவும் , நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கூட்டுவது குறித்தும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படுகிறது. மதுரையில் இருந்து 4 அமைச்சர்களுடன் புறப்பட்ட விமானம் ஏர் இந்தியா விமானம் புறப்பட […]
தமிழகம்:முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,அண்மையில் பெய்த மழையின் காரணமாக தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக,கன்னியாக்குமரி மாவட்டத்தில் தற்போது மழை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில்,மழை வெள்ள […]
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று மாலை 6 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது.இந்த கூட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றி தொடங்கி வைத்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.அதனை தொடர்ந்து, இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் தலைநகர் டெல்லியில் இன்று 11 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் தலைநகர் டெல்லியில் இன்று 11 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீடு, மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தலைவர்களுடன் நாளை மறுநாள் நடைபெற உள்ள கூட்டம் தொடர்பாக ஆலோசனை […]
தேசிய பணியாளர் முகமைக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் இந்தியாவில் மத்திய அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை வங்கி பணிகளுக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பித்து, 1.25 கோடி பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக பல்வேறு தேர்வாணையங்கள் நடத்தும் பல வகையான தேர்வுகளில் தேர்வாளர்கள் பங்கேற்க வேண்டுயுள்ளது. இந்த நிலையில், இந்த தேர்வுகள் அனைத்தையும் பொதுத்தகுதி தேர்வு என்ற ஒற்றை தேர்வில் தவிர்க்கலாம் என கடந்த […]
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் உள்ள அம்சங்களில் ஒன்றான மும்மொழிக் கொள்கை, ஒருங்கிணைந்த தொழிற்கல்வி ஆகியவற்றிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர்களுடன் காணொளி காட்சி மூலம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை மற்றும் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறலாம். […]
வருகின்ற 14-ஆம் தேதி மிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.எனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்துவந்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே வருகின்ற 14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வு உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தலைமை செயலகத்தில் மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அந்த கூட்டத்தை தொடர்ந்து, அமைச்சர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தவிருந்தார். தற்பொழுது இந்த ஆலோசனை கூட்டமானது, தலைமை செயலகத்தில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வு, கொரோனா […]
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிருந்து உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை நீக்கியதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதில், அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை நீக்கியதாக அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, அந்த கூட்டத்தில் “ஒரே […]
பிரதமர் மோடி டெல்லி இல்லத்தில் இன்று மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரக கூட்டம் நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் அறிவித்த அறிவுப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு […]
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக போடப்பட்ட ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதையடுத்து அரசு […]
இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப்பணி குறித்து இந்த அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்றும் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கட்டங்களாக வெளியிட்டார். இந்த பொருளாதார ஊக்குவிப்பு […]
நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக கடந்த 17 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே 31 வரை நான்காவது கட்ட நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு காலத்திற்கான விரிவான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தை […]