சற்று நேரத்தில் தமிழக சட்டசபை ஆய்வுக்குழு கூட்டம் தொடக்கம்!!

With the budget session set to begin on the 13th, a business review meeting chaired by Speaker Appavu will begin shortly.

வரும் 13ல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், சற்று நேரத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் தொடக்கம்.

2021-22ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 13ம் தேதி தொடங்குகிறது. அப்போது, திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு முதன் முறையாக தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். மறுநாள், தமிழகத்தில் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

இதனிடையே நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியின் வருவாய், இழப்பு தொடர்பான வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், தமிழக சட்டசபை அலுவல் ஆய்வுக் கூட்டம், இன்று காலை 11:00 மணிக்கு நடைபெற உள்ளது.

சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற இருக்கும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் ஆகஸ்ட் 13 இல் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது, மானிய கோரிக்கையை எப்போது வைத்துக் கொள்வது என்பதை முடிவு செய்வதற்காக ஆலோசனை நடத்தப்படுகிறது.

மேலும், இந்த கூட்டத்தில், முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல் முறையாக இம்முறை, ‘இ – பட்ஜெட்’ தாக்கல் (காகிதமில்லா) செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.