#Budget2019 : பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இதில் கடந்த முறை அருண் ஜெட்லீ பதவி

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இதில் கடந்த முறை அருண் ஜெட்லீ பதவி வகித்த நிதியமைச்சர் பதவி ,இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை பெற்றார்.

தற்போது  மத்திய பட்ஜெட் 2019-2020க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.