விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசு உண்மையாக செயல்பட்டு வருகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தங்கள் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் போராட்டம் குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பிரதமர் மோடி, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறினார். செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், “மத்திய அரசு 3 […]
இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகளை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி வெள்ளை அறிக்கையில், 2014-ல் பாஜக […]
சென்னையில் நேற்று நடைபெற்ற விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் 2014 – 2023 வரை இருந்து மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. அதிலிருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி தமிழகத்தில் இருந்து பெற்ற வரியைவிட கூடுதலாக தான் நிதி கொடுத்து இருக்கிறோம் என கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் […]
இலங்கை செல்லும் நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் அரசு முறை பயணமாக இன்று இலங்கை செல்ல உள்ளார். அங்கு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் SBI வாங்கி கிளைகளை திறந்துவைக்கும் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாண நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். பின்னர், இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்த 200வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், இலங்கை அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட NAAM 200 […]
இன்று தலைநகர் டெல்லியில் 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாநில நிதியமைச்சர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது, குறிப்பிட்ட பொருட்கள், சேவைகளுக்கு வரி விதிப்பு, வரி குறைப்பு உள்ளிட்டவைகள் குறித்து நிதியமைச்சர் தலைமையில் , நிதித்துறை அதிகாரிகள், மாநில பிரதிநிதிகள் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை […]
பல்வேறு கருத்து மோதல்களை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலை அடுத்து இனி வரும் தேர்தல்களிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும் அதிமுக திட்டவட்டமான அறிவித்து இருந்தது. இந்த சமயத்தில் தான், இன்று மத்திய அரசின் மெகா கடன் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள கோவை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை, அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் […]
பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தை, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று மத்திய அரசு “தூய்மை பாரதம் (Swachh Bharat)” எனும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் காலை 10 மணி முதல் 11 மணி வரையில் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மை செய்ய வேண்டும் என அறைகூவல் விடுத்து இருந்தார். மேலும், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி, […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதுதொடர்பாக அதிமுக அறிக்கையும் வெளியிட்டது. அதிமுகவின் இந்த முடிவு குறித்து, அண்ணாமலை அவர்கள் பாஜக தேசிய தலைமை இதுகுறித்து பேசும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பாஜக மேலிடத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜகவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து […]
தமிழில் படித்ததால் தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் என எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நிதியமைச்சர் பேச்சு. சென்னையில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மருத்துவம் தொடர்பான அனைத்து படிப்புகளும் தமிழில் இருக்க வேண்டும். தமிழ்மொழியில் கல்வி கற்றால் தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ படிப்பை முடித்து பட்டம் பெறுவோருக்கு சமூக பொறுப்புணர்வு அவசியம் எனவும் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் 16.6% ஜிஎஸ்டி வசூல் அதிகம் என மத்திய நிதியமைச்சகம் தகவல். கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 16.6% அதிகரித்து, ரூ.1.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் 16.6% அதிகம் எனவும் மத்திய நிதியமைச்சகம் தகவல் கூறியுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகமானத்தில் இருந்து அக்டோபர் மாத வரி வசூல், இரண்டாவது மிக அதிகபட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த […]
இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை, அமெரிக்க டாலர் மதிப்புதான் உயர்கிறது என நிதியமைச்சர் கூறியது உண்மை என ப.சிதம்பரம் விமர்சனம். சமீப நாட்களாக இந்திய ரூபாயின் மதிப்பு கண்டு வீழ்ச்சி அடைந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை, அமெரிக்க டாலரின் மதிப்புதான் தொடர்ந்து உயர்ந்து வருவதாக பார்க்கிறேன். அனைத்து நாட்டு […]
சட்டவிரோத கடன் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு முடிவு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல். சட்டவிரோத கடன் கடன் வழங்கும் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத கடன் செயலிகளால் பல தற்கொலைகள் தூண்டப்பட்டு இருப்பதை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்துக்கு பின் முடிவு எடுக்கப்பட்டது. எந்தெந்த கடன் செயலிகள் செயல்படலாம் என ரிசர்வ் […]
இந்தியவியல் ஜனநாயகம் வலுவாக உள்ளது என “Dreams Meet Delivery” எனும் நூல் வெளியிட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் பேச்சு. சென்னை போரூரில் “மோடி 2020 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி” நூல் வெளியிட்டு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் சக்திவாய்ந்ததாக உள்ளது. ஆட்சியில் இருப்பதற்கு வரவில்லை, அடிப்படையில் மாற்றம் கொண்டுவர வந்துள்ளதாக மோடி கூறுவார். நரேந்திர மோடி ஆட்சியில் எங்கேயாவது ஊழல் என கேள்விப்பட்டுள்ளீர்களா என கேள்வி […]
தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகளில் தமிழிலேயே பணப் பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு என நிதியமைச்சர் விளக்கம். தமிழகத்தில் செயல்படும் அனைத்து வங்கி கிளைகளிலும் தமிழில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர், தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகள், ஏடிஎம்களில் தமிழிலேயே பணப்பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றிலும் தமிழிலேயே பணப்பரிவர்த்தனை செய்ய […]
தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் 14 இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தொழில் புரிய எளிதான மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் 14 இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. பட்டியலில் டாப் சாதனையாளர்கள் பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத், தெலுங்கானா மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி,மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டம் நாளையும் நடைபெற உள்ள நிலையில்,இதில்,பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது குறித்தும், வருவாய் […]
தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது.இதில் 41 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில்,நாடு முழுவதும் உள்ள நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 16 எம்பி இடங்களுக்கு நேற்று (ஜூன் 10-ஆம் தேதி) மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,உடனே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. கர்நாடகா: இந்நிலையில்,கர்நாடகாவில் நான்கு இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவை […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் அறிவிப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டது.இந்நிலையில்,சென்னையில் இரண்டாவது நாளாக எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை சதத்தை விட்டு குறையாமல் விற்பனையானது. அந்த வகையில்,நேற்று முன்தினம் வரை பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி,சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான […]
கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்வாகிறார். தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களைவர் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10ல் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், மாநிலங்களவைக்கு மீண்டும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்வாகிறார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மாநிலங்களவை […]