மத்திய அரசு பட்ஜெட் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். நேற்று மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், சாதாரண நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டாக அமைந்துள்ளது. மத்திய அரசு பட்ஜெட் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது .இந்த பட்ஜெட்டில் மகளிர் சுய உதவிக்குழு விவசாயம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.மேலும் இது ஒரு சுவையான பட்ஜெட் ,சுமையான பட்ஜெட் […]
மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஏழைகளுக்கான பட்ஜெட் இது. இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் திட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளது. மத்திய பட்ஜெட் நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்டாகவும், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாகவும் உள்ளது. பட்ஜெட் குறித்து பெருமையடைகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்பொழுது அவர் வெளியிட்ட அறிவிப்பில்,ஒவ்வொரு சுயஉதவிக் குழுவிலும் உள்ள பெண்களுக்கும் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும். மேலும் மகளீர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பெட்ரோல், டீசல் மீது செஸ் வரி அதிகரிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார் . 1 லிட்டர் பெட்ரோல், டீசல் மீதான ‘செஸ் வரி’ தலா 1 ரூபாய் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் , எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினார்கள். மேலும் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரி 10 % -லிருந்து […]
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்பொழுது அவர் நிகழ்த்திய உரையில்,மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வருமான வரிச்சலுகை அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மின்சார வாகனங்களின் தலைசிறந்த உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்பொழுது அவர் நிகழ்த்திய உரையில், இந்தியாவின் உயர்கல்வியை உலகத்தரத்திற்கு மேம்படுத்த புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும். மேலும் என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்களிடம் காந்திய கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படும்.அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளுக்குள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்திய உருவெடுக்கும் என்று தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலை செய்து வருகிறார். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் , 2022 -ஆண்டு ஊராக பகுதியில் இருக்கும் குடும்பங்கள் வீடு பெற்று இருப்பார்கள்.மேலும் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும் 2022-ம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள ஊராக பகுதியில் இருக்கும் குடும்பங்களுக்கு முழுமையான மின்சாரம் மற்றும் எரிபொருள் இணைப்பை பெற்று இருப்பார்கள்.ஒரே நாடு ஒரே மின்சார அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சம […]
மத்திய பட்ஜெட் 2019-2020க்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தார்.அப்பொழுது அவரது உரையில்,சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு நடப்பாண்டு ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு குறு வணிக வியாபாரிகள் 3 கோடி பேருக்கு பென்ஷன் திட்டம் கொண்டுவரப்படும்.சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆதார் மற்றும் வங்கி கணக்கு மட்டுமே இதற்கு […]
மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலை செய்து வருகிறார். பட்ஜெட் உரையில் பேசிய நிர்மலா சீதாராமன் 2014-ம் ஆண்டு மோடி ஆட்சி அமைக்கும் போது இந்திய பொருளாதாரம் 1.55 லட்சம் கோடி டாலராக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டில் இந்திய பொருளாதாரம் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்ந்து உள்ளது.சந்திரயான் , சுகன்யான் போன்ற விண்வெளி திட்டங்களில் இந்தியா விண்வெளி துறையில் […]
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இதில் கடந்த முறை அருண் ஜெட்லீ பதவி வகித்த நிதியமைச்சர் பதவி ,இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை பெற்றார். தற்போது மத்திய பட்ஜெட் […]
கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார்.இதனால் மீண்டும் பதவியேற்ற பாஜகவின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இதில் கடந்த முறை அருண் ஜெட்லீ பதவி வகித்த நிதியமைச்சர் பதவி ,இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் […]
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இந்த முறை நிதி அமைச்சர்பதவி நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் நாளை (ஜூலை 5ஆம் தேதி )தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில் இதற்கு முன்பாக இன்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படுகிறது. இதனையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
பிஎஸ்என்எல் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிதி நெருக்கடியின் காரணமாக, அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு ஜூன் மாத ஊதியத்தை கூட கொடுக்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த நிறுவனம் ஜூன் மாத ஊதியம் கொடுக்கவும், இந்நிறுவனம் தொடர்ந்து இயங்கவும் உடனடியாக 850 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. மேலும், இந்நிறுவனம் தொடர்ந்து சீராக இயங்குவதற்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது. […]
டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்மோகன் சிங்கை சந்தித்தார். காங்கிரஸ் ஆட்சிகாலத்தின் போது மத்திய நிதி அமைச்சராக மன்மோகன் சிங் பதவி வகித்தார்.17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில் இன்று நிர்மலா சீதாராமன் முன்னாள் பிரதமரும் ,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்தில் நடைபெற்றது.
ஜவுளித்துறைக்கு ரூ.76 கோடி ஊக்க தொகை வழங்குவதாக ஸ்மிரிதி இரானி உறுதி அளித்துள்ளார் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். டெல்லியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மத்திய அமைச்சர் க ஸ்மிரிதி இரானியை சந்தித்தார்.இதன் பின்னர் அவர் கூறுகையில், தமிழக ஜவுளித்துறைக்கு ரூ.76 கோடி ஊக்க தொகை வழங்க கோரினோம்.பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு வழங்குவதாக ஸ்மிரிதி இரானி உறுதி அளித்துள்ளார். தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நிதி அமைச்சகம் சார்பில் நாட்டிற்கான மொத்த பட்ஜெட் தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நிதி அமைச்சகம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பு நேற்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 5ம் தேதியன்று நாடாளுமன்ற அவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பு குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், முந்தைய அமைச்சரவையில் பாதுகாப்பு துறையின் அமைச்சராக இருந்த பொழுது எதிர்கொண்ட சவால்களை […]
மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பிற்கு முன் நடக்கும் அல்வா குடுக்கும் நிகழ்வு புதுடில்லியில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் அல்வா வழங்கினார். ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் நிதி பட்ஜெட் தயாரிக்கும் செய்யும் முன்பு அல்வா குடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது.இந்திய கலாச்சாரம் படி எந்த ஒரு நல்ல விஷயம் தொடங்கும் முன்பு இனிப்பு வழங்கப்படும்.அதே போல், இந்த முறை புதிய அமைச்சரவை சார்பில் வரும் […]
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது .தமிழகம் சார்பில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார்.
கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார்.இதனால் மீண்டும் பதவியேற்ற பாஜகவின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இதில் கடந்த முறை அருண் ஜெட்லீ பதவி வகித்த நிதியமைச்சர் பதவி ,இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் […]
நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். ஜூலை 4 ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார் என்று தெரிவித்துள்ளார்.