அதிமுகவின் கோட்டையை மொத்தமாக குழிதோண்டி புதைப்போம் – முக ஸ்டாலின்

DMK leader Mk Stalin has said that Coimbatore should win all the 10 constituencies in the western region.

கோவை மேற்கு மண்டலத்தின் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், ஊழல், அராஜகம் செய்து மக்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று அமைச்சர் வேலுமணி நினைக்கிறாரா? என்று கூறி மக்கள் சொத்தை கொள்ளையடித்து மக்களுக்கே கொடுப்பது கேவலமாக இல்லையா உங்களுக்கு என்று கூறியுள்ளார்.

இன்று அமைச்சர் பதிவில் உள்ளதால் அரசாங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வேலுமணிக்கு தலையாட்டி கொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாறும், அன்று காட்சியும் மாறும். வேலுமணி ஊழல் மற்றும் அராஜக ஆட்சிக்கு முடிவுகட்ட வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கோவை மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வென்றாக வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று சொல்லி நாட்டை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே அதில் ஓட்டை விழுந்துவிட்டது. இந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக குழிதோண்டி புதைப்போம். மக்கள் பேராதரவுடன் அதை நடத்தி முடிப்போம் என உறுதி அளித்துள்ளார். கலைஞரின் கடைசி ஆசை ஆட்சிக்கு வர வேண்டும் என்பது இல்லை நாட்டை காப்பற்ற வேண்டும் என்பதுதான் என கூறியுள்ளார்.