இன்னும் இரண்டு நாள் அவகாசம் வேண்டும்! சபாநாயகரிடம் கர்நாடக முதல்வர் கோரிக்கை!

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை நடத்தப்படும் என செய்திகள் வெளியாகின. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்து

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை நடத்தப்படும் என செய்திகள் வெளியாகின. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்து அவசர வழக்காக விசாரிக்க கோரினர். ஆனால் நீதிமன்றம் அதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது  என நிராகரித்தது.

தற்போது கர்நாடக முதல்வர் குமாரசாமி கர்நாடக சட்டசபை சபாநாயகரிடம், ‘ நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் நடத்த இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும்.’ என கோரிக்கை வைத்துள்ளார்.