கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை நடத்தப்படும் என செய்திகள் வெளியாகின. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்து அவசர வழக்காக விசாரிக்க கோரினர். ஆனால் நீதிமன்றம் அதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நிராகரித்தது. தற்போது கர்நாடக முதல்வர் குமாரசாமி கர்நாடக சட்டசபை சபாநாயகரிடம், ‘ நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் நடத்த இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும்.’ என கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடக சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடைபெறும் என இந்திய அரசியல் களமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். அதில்’ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இதுவரை தன்னை வந்து சந்திக்கவில்லை. அவர்கள் நேரில் தன்னை சந்தித்து விளக்கம் கூறும் வரை அவர்களது ராஜினாமாவை ஏற்க முடியாது எனவே, அதிருப்தி எம்எல்ஏக்கள் நாளை காலை […]
கர்நாடக அரசியலில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .இதனால் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மீதமுள்ள எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள். இந்த நிலையில் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.அவர் கூறுகையில், காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எம்எல்ஏக்களுக்கு 17ம் தேதி வரை […]