கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார் பசவராஜ் பொம்மை. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடகாவின் முதலமைச்சராக நான்காவது முறையாக பொறுப்பேற்றார் எடியூரப்பா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்தார். பாஜகவை பொருத்தவரையில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் எடியூரப்பா அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்பதாகவே இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை ஏற்றுக் […]
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கர்நாடகா மாநிலம் முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், வயது மூப்பின் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்ததை தொடர்ந்து, நேற்று தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் தவார் சந்த்யை சந்தித்து வழங்கியிருந்தார். எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அடுத்து முதல்வர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதில் மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி, சி.டி.ரவி […]
பள்ளிகள் திறப்பது குறித்து ஆராய நிபுணர் குழு அமைத்துள்ளோம். அந்த குழு அறிக்கையை சமர்ப்பித்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என கர்நாடக கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானா தொற்று பாதிப்பினால் கர்நாடக மாநிலத்தில் ஜூலை 5 வரையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அந்த ஞாயிற்றுக் கிழமைகளில் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற எதற்கும் பொதுமக்கள் […]
கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக அரசியலில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பாவிற்கு கிடைத்தது.பின்னர் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார் எடியூரப்பா. ஆனால் அமைச்சரவை குறித்து மட்டும் இந்நாள் வரை அறிவிக்காமல் இருந்து வந்தார்.இந்நிலையில் கர்நாடகாவில் முதலமைச்சர் […]
நாடு முழுவதும் பிளாஷ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் 2016ஆம் ஆண்டே பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யபட்டுள்ளது. இங்கு முதல் தடவை பிளாஸ்டிக் உபயோகப்படுத்தி மாட்டிக்கொண்டால் 500 ருபாய் அபராதமும் , மீண்டும் தொடர்ந்தால் 1000 ரூபாய் அபராதமாக உயர்த்தப்படும். இந்நிலையில் அண்மையில் கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பெங்களூரு மேயர் கங்காம்பிகே மலர்க்கொத்து கொடுத்தார். அந்த பூங்கொத்து சுற்றி, பிளாஸ்டிக் சுற்றப்பட்டிருந்தது. இதனால், மேயருக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ரசீது […]
கர்நாடக முதலைவராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எடியூரப்பா. இதற்க்கு முன்னர் பதவி வகித்த மூன்று தடவையும் முழுதாக ஆட்சியில் இல்லாமல் இடையிலேயே முதலமைச்சர் பதவி பறிபோனது குறிப்பிடத்தக்கது. தற்போது எடியூரப்பா, ஆளுநருக்கு ஆட்சியமைக்க உரிமைகோரி அனுப்பப்பட்ட கடிதத்தில் தனது பெயரில் உள்ள ஆங்கில எழுத்துக்களில் மட்டும் மற்றம் கொண்டு வந்துள்ளார். அதாவது, அவரது இதற்க்கு முன்னர் Yeddyurappa என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த உரிமை கோரும் கடிதத்தில், Yediyurappa என மாற்றம் செய்துள்ளார். இப்படி மாற்றம் செய்த […]
கர்நாடக சட்டப்பேரவை விவகாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று அல்லது நாளை கண்டிப்பாக சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதம் முடிந்தவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என சபாநாயகர் கூறினார். தற்போது சட்ட பேரவையில் முதல்வர் குமாரசாமி பேசி வருகிறார். காங்கிரஸ் – மஜக கூட்டணி ஆட்சி அமைத்தது முதல் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வந்தது. என தெரிவித்தார். மேலும், நான் எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்ய தயார். ‘ என உருக்கமாக தனது உரையை நிகழ்த்தினார்.
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை நடத்தப்படும் என செய்திகள் வெளியாகின. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்து அவசர வழக்காக விசாரிக்க கோரினர். ஆனால் நீதிமன்றம் அதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நிராகரித்தது. தற்போது கர்நாடக முதல்வர் குமாரசாமி கர்நாடக சட்டசபை சபாநாயகரிடம், ‘ நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் நடத்த இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும்.’ என கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடகா சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் ஆளும் தரப்பு பேச்சுவார்த்தை அதிகமாக நடத்தி காலதாமதம் ஆனதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதனால் பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்திருந்தனர். அதன் படி, ஆளுநர், சபாநாயகருக்கு, ‘ இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கெடு விதித்து இருந்தார். ‘ ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வில்லை. இது குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுகையில், ‘ ஆளுநர் மீது […]