இந்தியனாக இருப்பதே, இந்தியை அறிந்து வைத்து கொள்வதற்கு சமமானது என்பதை நான் இன்று அறிந்துகொண்டேன். – எம்.பி கனிமொழி ட்வீட்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி தலைவியுமான கனிமொழி, தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், ‘இன்று விமான நிலையத்தில் ஒரு விமானநிலைய அதிகாரி என்னிடம் இந்தியனா என ஹிந்தி மொழியில் கேட்டார். எனக்கு இந்தி தெரியாததால் என்னுடன் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டுகொண்டேன். இந்தியனாக இருப்பதே, இந்தியை அறிந்து வைத்து கொள்வதற்கு சமமானது என்பதை நான் இன்று அறிந்துகொண்டேன்.’ என பதிவிட்டு அதன் கீழ்,#hindiimpositionஎனும் டேக்கையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.
unknown node