விருப்பப்படுவோர் இந்தியை கற்கலாம் என பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு விழா விழுப்புரம் சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்பவர்கள் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும் என்பதால் வருகின்ற ஆண்டில் இருந்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் கட்டாயம் தமிழ் மொழி படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் எப்பொழுதோ […]
தமிழ் வழியில் படிக்கும் திமுக நிர்வாகிகளின் பிள்ளைகள் பட்டியலை வெளியிட வேண்டும் என வானதி சீனிவாசன் பேச்சு. இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர், குடியரசு தலைவருக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அளித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. இது இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். தமிழினத்தை தமிழரை பண்பாட்டை காக்கும் போராட்டமாக தொடர்ந்து […]
ஒரே நாடு ஒரே மொழி என்ற பெயரில் பிற தேசிய மொழிகளை அளிக்க முயற்சி என இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தில் முதலமைச்சர் உரை. மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய முதலமைச்சர், குடியரசு தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குழு அளித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. அமித்ஷா குழுவின் பரிந்துரைகள், இந்தி பேசாத மாநில […]
இந்தியை திணிக்கும் முயற்சியாக அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்ற குழுவின் பரிந்துரை உள்ளது என கேஎஸ் அழகிரி கருத்து. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி பதிவிட்டுள்ள பதிவில், பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்கிற முயற்சியின் வெளிப்பாடாகத் தான் அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது. இந்த முயற்சிகளை தீவிரப்படுத்துகிற பணியில் ஈடுபட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியா பலமொழிகள் பேசுகிற பன்முகத்தன்மை […]
எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம் என இந்தியை பயிற்று மொழியாக்கும் முயற்சிக்கு முதலமைச்சர் கண்டனம். கட்டாய இந்தியை புகுத்தி மத்திய அரசு இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை எப்படியாவது சிதைத்துவிட்டு ஒரே நாடு என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே […]
இந்தி திணிப்பு நடவடிக்கையை கண்டித்து மதிமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைக்கோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தி திணிப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்தும், அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்ககோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மொழிக்கு நாங்கள் எதிரி அல்ல,மொழி திணிப்புக்கு தான் எதிரி, இந்தியை இங்கு திணிக்க […]
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் அலுவல் மொழியாக இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி […]
இந்தியை அலுவல் மொழியாக அறிவித்ததை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை திமுகவினர் முற்றுகை. புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் அலுவல் மொழியாக இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் […]
இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர் ரகுமான் கருத்தை பாஜக வரவேற்கிறது என அண்ணாமலை பேட்டி. சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய பல்கலைகலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வு 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலைக்கான வாட் வரியை தமிழக அரசு குறைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். இதனைத்தொடர்ந்து […]
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எக்காலத்திலும் ஏற்கமாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என பேசியதற்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் தங்களை எதிர்ப்பை தெரிவித்து கண்டங்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது அமித் ஷாவின் பேச்சு நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் உள்ளே நுழைய விடமாட்டோம் என அதிமுக முன்னாள் […]
மொழிரீதியாக பாகுபாடு காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கு கனிமொழி கடிதம். யோகா மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி வகுப்பு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்த பயிற்சியில் இந்தியா முழுவதும் உள்ள 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 37 பேர் கலந்துகொண்டனர். அப்போது, மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசினார். அந்நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் குறுக்கிட்டு ஆங்கிலத்தில் பேசும்படி தெரிவித்தனர். […]
இந்தியனாக இருப்பதே, இந்தியை அறிந்து வைத்து கொள்வதற்கு சமமானது என்பதை நான் இன்று அறிந்துகொண்டேன். – எம்.பி கனிமொழி ட்வீட். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி தலைவியுமான கனிமொழி, தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், ‘இன்று விமான நிலையத்தில் ஒரு விமானநிலைய அதிகாரி என்னிடம் இந்தியனா என ஹிந்தி மொழியில் கேட்டார். எனக்கு இந்தி தெரியாததால் என்னுடன் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டுகொண்டேன். இந்தியனாக இருப்பதே, இந்தியை அறிந்து […]
இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்த கருத்தை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்தது. இந்த நிலையில் இன்று திமுக […]
இந்தி மொழியை திணித்தால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு எதிராக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பொதுவான மொழி என்று ஓன்று இருந்தால் அது நாட்டின் […]
இந்தி திணிப்பை எதிர்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. இன்று சென்னை அண்ணா அறிவாயலத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆகவே இந்த கூட்டத்தில் இந்தி […]
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இந்த புதிய கல்வி வரைவு கொள்கை 484 பக்கங்கள் கொண்டுள்ளது. இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை பற்றி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.அதில்,எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும் […]