Election2024 : நடைப்பயிற்சி முடித்துக்கொண்டு தூத்துக்குடி காய்கறி சந்தையில் திமுகவுக்கு வாக்கு சேகரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் கிட்டத்தட்ட 25 நாட்களே உள்ள நிலையில் நாளை (மார்ச் 27ஆம்) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் […]
2G Case : காங்கிரஸ் –திமுக கூட்டணி ஆட்சியில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் திமுக எம்பி ஆ.ராசா. அப்போது திமுக மாநிலங்களவை எம்பியாக கனிமொழி இருந்திருந்தார். அந்த சமயம் மத்திய தொலைதொடர்பு துறையில் 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில், சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ வழக்கு விசாரணை மேற்கொண்டு வந்தது. Read More – கரும்பு விவசாயி to மைக்.! நாம் தமிழர் கட்சியின் […]
Kanimozhi MP – மக்களவை தேர்தல நெருங்கும் வேளையில் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை , தொகுதி பங்கீடு என நிறைவு செய்து வேட்பாளரை அறிவிக்கும் கட்டத்தை நெருங்கி வருகின்றன. ஏற்கனவே பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. காங்கிரஸ் மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. Read More – SBI வங்கி செயல் கேவலமானது.! விளாசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.! திமுக, அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திமுக தலைமை […]
DMK MP Kanimozhi – பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்து இருந்தார். நேற்று திருப்பூர் பல்லடத்தில் பாஜக பொதுக்கூட்டம், மதுரையில் சிறு குறு தொழில் முனைவோர்களின் கருத்தரங்கம் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் என நேற்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி, நெல்லை வந்திருந்தார். இதில் , தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க […]
கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த 1.5 கோடிக்கு அதிகமான மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நிறுத்தப்படும் என்று திமுக எம்பி தான் கனிமொழி நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை […]
2024 கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தால் திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையை தயாரிக்க, திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு முதற்கட்டமாக நேற்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி சென்றனர். அக்கூட்டத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் இருந்து மனுக்களை பெற்றனர். தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை மோடி பார்வையிடாதது ஏன்? – ஆ.ராசா […]
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், பல ஆண்டுகளாகவே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகத்தில் பல்வேறு சமயங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வந்த இந்த இயக்கத்தை நேற்று அரசியல் கட்சியாக பதிவு செய்து தனது கட்சி பெயரையும் அது குறித்த அறிக்கையும் நடிகர் விஜய் வெளியிட்டார். “தமிழக வெற்றி கழகம்” என பெயரிடப்பட்டுள்ள தங்கள் கட்சியை விஜய் தரப்பினர் நேற்று […]
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் அறிக்கை தயார் செய்வது, தேர்த பணிக்குழு அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பான பணிகள் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில், சமீபத்தில், திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்புக்குழு, தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]
தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நேற்று காலை முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மிக கனமழையால், பல்வேறு இடங்கல் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. பெரிதும் தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தென் தமிழகத்தில் இன்றும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை […]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா ஆகியோர் மக்களவைக்குள் உள்ளே குதித்தனர். அவர்கள் காலில் மறைத்து வைத்து இருந்த வண்ண பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதே நேரத்தில் வெளியில் ஹரியானாவை சேர்ந்த நீலம் எனும் மாணவி மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தின் […]
நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவைக்குள் நேற்று அத்துமீறி உள்ளே நுழைந்த சிலர் கோஷங்களை எழுப்பி, தங்கள் கைகளில் இருந்த வண்ண புகை குப்பிகள் வீசினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று, ஹரியானவை சேர்ந்த நீலம் என்ற பெண் உட்பட 2 பேர் கைது செய்ப்பட்டனர். இந்த சூழலில், மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் […]
எளியவர்களின் உலகை தன் படைப்புகளில் கட்டி எழுப்பியவர் எழுத்தாளர் இமையம் என கனிமொழி எம்.பி புகழாரம் எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு ‘குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து டெஹ்ரிவித்திருந்த நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் வாழ்த்து தெரிவித்து செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்படும் எளியவர்களின் உலகை தன் படைப்புகளில் கட்டி எழுப்பியவர் எழுத்தாளர் இமையம் அவர்கள். நவீன இலக்கிய உலகில் திராவிடத்தின் முகம். சமூக அமைப்புகளின் உள்ளடக்குகளை […]
ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதிமுகவுக்கு சுயமரியாதை இல்லாமல் போய்விட்டது என எம்பி கனிமொழி பேச்சு. தூத்துக்குடி திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் எம்பி கனிமொழி அவர்கள் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், மாநில சுயாட்சிக்கு, தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக செயல்படக்கூடிய ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதிமுகவுக்கு சுயமரியாதை இல்லாமல் போய்விட்டது. உங்களை நினைத்து வருத்தப்படுகிறோம் என விமர்சித்துள்ளார்.
மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகரில் படகு போட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டியை எம்பி கனிமொழி கொடியசைத்து தோடங்கி வைத்தார். நேற்று உலகம் முழுக்க மீனவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்த மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சிறிய ரக மோட்டார் படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தூத்துக்குடி எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த […]
வ.உ.சிதம்பரனார் அவர்களின் 86-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கனிமொழி எம்.பி ட்வீட். இன்று வ.உ.சிதம்பரனார் அவர்களின் 86-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், அவரது தியாகத்தை போற்றி அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று வ.உ.சிதம்பரனார் அவர்களின் 86-ஆம் ஆண்டு நினைவு நாள். வாய்த்த வழிகளிலெல்லாம் நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டவரை, தன்னுரிமைப் போராட்டதிற்கும் தியாக வாழ்விற்கும் […]
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்குக் கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் நிதி வழங்கியமைக்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கனிமொழி எம்.பி ட்வீட். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியோடு, மேலும் கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் […]
அனல் மேலே பனித்துளி படத்தில் இடம்பெற்றிருக்கும் ஏதோ நான் இங்கே என்ற பாடலை வெளியிட்ட கனிமொழி. திமுக எம்.பி கனிமொழி அவர்கள், அனல் மேலே பனித்துளி படத்தில் இடம்பெற்றிருக்கும் ஏதோ நான் இங்கே என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெண்ணை, உடலாக, காட்சிப்பொருளாக , பாரம்பரியப் பெருமையாக, சொத்தாக, வன்முறைகளின் இலக்காக, உயிரற்ற புனிதமாகப் பார்க்கும் இந்த சமூகத்தை, வழமையான எண்ணங்களை, கேள்வி கேட்கும், உடைக்க நினைக்கும் தமிழ் […]
பெண்கள் வீட்டில் இருக்கக் கூடாது. கனவுகளை கொண்டாடுபவர்களாக இருக்க வேண்டும் என கனிமொழி எம்.பி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேச்சு. வேலூரில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் திமுக எம்பி கனிமொழி கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சாதியாக இருந்தாலும் மொழியாக இருந்தாலும் இந்த சமூகம் திணித்துக் கொண்டேதான் இருக்கும். பெண்கள் வீட்டில் இருக்கக் கூடாது. கனவுகளை கொண்டாடுபவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஒரு பெண்ணாகவும் மனிதனாகவும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதை யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.’ என கனிமொழி எம்பி குஷ்பூ டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ளார். நேற்று திமுக பிரமுகர் ஒருவர் சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் மேடையில் பேசுகையில், பாஜக பெண் பிரமுகர்களான குஷ்பூ, காயத்ரி ரகுராம், கௌதமி ஆகியோரை பற்றி விமர்சித்திருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. […]
தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க முடியாது என கனிமொழி பேட்டி. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி அவர்கள் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் என்பது அரசின் நிலைப்பாடு; தமிழ் நமது அடையாளம். தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க முடியாது. மேலும், பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் அல்ல; அது அலங்காரமாக இருந்தாலும் சரி, […]