பாஜகவுக்கும் அவர்களுடைய பேச்சுவார்தைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை – எல் முருகன்

L Murugan has said that the talk of a merger between the BJP and the AIADMK has nothing to do with it.

பாஜகவுக்கும், அதிமுக அமமுகவுக்கும் இணைப்பு தொடர்பான பேச்சுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என எல் முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் எல் முருகனிடம், அதிமுகவுடன் சசிகலா இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை பாஜக நடத்தியதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, பாஜகவுக்கும், அவர்களுடைய (அமமுக, அதிமுக) இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது என கூறியுள்ளார்.

அதிமுக – அமமுக இடையிலான விவகாரத்தில் பாஜக தலையிடும் கிடையாது என தெரிவித்துள்ளார். இது அதிமுக – அமமுக இடையேயான உள்கட்சி விவகாரம், இதில் எங்களுடைய தலையிடும், பேச்சுவார்த்தையும் எதுமே இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.