சுந்தரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா (வயது 102) நேற்று முன்தினம் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்தியாவின் விடுதலைக்கும், இந்திய அரசியலிலும் முக்கிய பங்காற்றிய மூத்த அரசியல் தலைவர் சங்கரய்யாவின் மறைவுக்கு பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர். சங்கரய்யாவின் உடலுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றும், மூன்று முறை […]
மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் எல்.முருகன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியார்களை சந்தித்து தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். அவர் கூறுகையில், முன்பு அனைவரும் DD பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். தற்போது மீண்டும் DD பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளோம். ஜனவரி மாதம் 14 முதல் DD பொதிகையானது DD தமிழ் என பெயர் மாற்ற நடவடிக்கை […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் “என் மண் என் மக்கள்” எனும் நடைப்பயணத்தை தமிழக பாஜகவினர் துவங்கி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேற்று நாமக்கல் பகுதியில் “என் மண் என் மக்கள்” நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் , குமாரபாளையம் பகுதியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இணைந்து நேற்றைய நடைப்பயணத்தில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தமிழக அரசு […]
கடந்த 19-ஆம் தேதி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், பங்காரு அடிகளார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே இரங்கல் தெரிவித்து இருந்தனர். ஆளுநர் தமிழிசை, முதல்வர் மு.க.ஸ்டாலின், டாக்.ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பாஜகவில் இருந்து நடிகை கவுதமி விலகல் – […]
பாஜகவில் நீண்ட வருடங்களாக பல்வேறு பொறுப்புகளில் இருந்துவந்த நடிகை கௌதமி திடீரென பாஜகவில் , அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக பாஜக தலைமைக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், பாஜகவில் அங்கம் வகிக்கும் அழகப்பன் என்பவர் தன்னை 20 வருடத்திற்க்கு முன்னர் நான் சம்பாதித்த சொத்துக்களை கவனிக்க என்னை தொடர்பு கொண்டார். ஆனால், எனது சொத்துக்களை, பணத்தை அழகப்பன் ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக நான் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன் என தெரிவித்திருந்தார். […]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மன்றத்தை நிறுவிய ஆன்மீக குரு பங்காரு அடிகளார் நேற்று மாலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது உடல் அவர் வீட்டில் இருந்து நேற்று மேல்மருவத்தூர் ஆன்மீக மன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நேரில் வந்து தனது அஞ்சலியை பங்காரு அடிகளாருக்கு செலுத்தினார். மற்ற முக்கிய அரசியல் […]
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியில் வெற்றிக்கான முழக்கமாக தான் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டுள்ளனர் என மத்திய இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 15ம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியே நடுவே, பாகிஸ்தான் அணி […]
நேற்று குஜராத் அகமதாபாத் , நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உலக கோப்பை கிரிக்கெட் லீக் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. போட்டி நடைபெற்ற சமயத்தில், பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பும் போது, சில ரசிகர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர். […]
மத்திய இணையமைச்சரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான எல்.முருகன் இன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார். தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் கூறினார். அப்போது அவரிடம் , கடந்த சனிக்கிழமை அன்று குஜராத் , அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் வீரர்களை பார்த்து சிலர் ஜெய் ஸ்ரீ ராம் […]
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95% முடிந்ததாக ஜே.பி. நட்டா பேசியது குறித்து அமைச்சர் எல்.முருகன் விளக்கம். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்தார். அப்போது, மதுரையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% நிறைவடைந்து உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். விரைவில் மதுரை எய்ம்ஸ் […]
கொரோனாவில் இருந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் என அமைச்சர் எல் முருகன் ட்வீட். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், லேசான அறிகுறிகளுடன் ஓபிஎஸ் தனி வார்டில் சிகிச்சை பெறுகிறார். தற்போது ஓபிஎஸ்-யின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓபிஎஸ்-க்கு கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை […]
மாணவர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தவே பல்கலைக்கழக விழாவில் எல் முருகன் பங்கேற்றார் என தமிழிசை தகவல். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகியிருந்தது நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டதை அரசியலாக்க வேண்டாம் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்த […]
அம்பேத்கரின் கனவுகளை தனது லட்சிய இலக்காக எண்ணி செயல்படுத்தி கொண்டிருப்பவர் பிரதமர் என்று உண்மையை உலகு உணரும்படி உரைத்து கூறிய இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய இணை அமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் இசையமைப்பாளர் இளையராஜா செய்த குற்றம் என்ன? அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் யாரும் எந்த கருத்தையும் வெளிப்படுத்த கருத்து சுதந்திரம் அனுமதிக்கிறது எனவும் கூறினார்.
முரசொலி அலுவலக இடம் வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு. முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ளதாக எல் முருகன் கருத்து தொடர்பான வழக்கில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் ஏப்ரல் 22-ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்தபோது வேலூரில் நடந்த பொதுக்கூட்டம் […]
பா.ஜ.க சார்பில் 710 கிலோ மீன்களை மக்களுக்கு இலவசமாக வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடியின் 71-ஆவது பிறந்தநாள் பாஜகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜகவினர் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, சென்னை தண்டையார்பேட்டையில் பிரதமரின் 71-வது பிறந்தநாளையொட்டி பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 710 கிலோ மீன்களை இலவசமாக ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 எம்எல்ஏ-க்கள் பெற்று தந்த 4 மாவட்ட பாஜக தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்பட்டது. சென்னை கமலாயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நந்தகுமார் (கோவை), மகராஜன் (நெல்லை), சுப்பிரமணியன் (ஈரோடு), தர்மராஜ் (கன்னியாகுமரி) ஆகியோருக்கு இணையமைச்சர் எல் முருகன் இன்னோவா கார்களை பரிசளித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 எம்எல்ஏ-க்கள் பெற்று தந்த நிலையில், அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சி.பி.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன் உடனிருந்தார். […]
தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தயார் மறைவுக்கு எல்.முருகன் இரங்கல். தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி அவர்கள், இன்று காலை வயது மூப்பின் காரணமாக காலமானார். இதனையடுத்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி. டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் திருமதி.கிருஷ்ணகுமாரி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். மறைந்த திருமதி கிருஷ்ணகுமாரி, மூத்த […]
மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றபின் மக்களை சந்திக்க தமிழகத்தில் யாத்திரை செய்கிறேன் என்று எல் முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையச் செய்யும் நோக்கில் ‘மக்கள் ஆசீர்வாத யாத்திரை’ எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கோவையில் தொடங்கியுள்ளார். இந்த யாத்திரை வரும் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது என கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக […]
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வரும் 10ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் ’ஆசீர்வாதம் யாத்திரை’ என்ற பெயரில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 16 முதல் 18 ஆம் தேதி வரை டெல்லியில் இருந்து நாடு முழுவதும் அமைச்சர்கள் ஆசிர்வாதம் யாத்திரை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த யாத்திரையின் போது, பாஜக அரசின் செயல் […]
மத்திய இணை அமைச்சர் பதவியேற்ற பிறகு முதல் முறையாக எல்.முருகன் சென்னை வருகை. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த 2019-ம் ஆண்டு தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின் பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றனர். சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், 43 புதிய […]