#Breaking:காமராஜர் பல்.கழக பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு – அமைச்சர் பொன்முடி திடீர் அறிவிப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவினை தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவினை தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 54-வது பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.இந்நிலையில்,மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவினை தமிழக அரசு புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.அரசை ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கான தேதி முடிவு செய்யப்பட்டதால், பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

மேலும்,பல்கலைக்கழகங்கள்,மாணவர்களிடையே தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அரசியலை புகுத்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும், குறிப்பாக,பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழா மேடையினை பாஜகவின் பிரச்சார மேடையாக ஆளுநர் பயன்படுத்துகிறார் என்றும் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதே ஆளுநரின் கடமை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.