Ponmudi: சென்னை கிண்டியில் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அமைச்சராக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி ஆளுநர் ரவிக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருந்தார். Read More – விருதுநகரில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்.. தேமுதிக வேட்பாளர் லிஸ்ட்…. ஆனால், ஆளுநர் இதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் […]
Ponmudi : தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால், தனது அமைச்சர் பதவியை மட்டுமல்லாது திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார் பொன்முடி. Read More – கனிமொழி, ஆ.ராசாவுக்கு எதிரான 2ஜி வழக்கு.! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பொன்முடி. உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து […]
உயர்கல்வித்துறை B.Ed., மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. உயர்கல்வித்துறை B.Ed., மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Ed., மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம். இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர http://tngasaedu.in இணையதளத்தை அணுகலாம். தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தை அணுக வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது அசல் சான்றிதழ்களை […]
பெரியார் பல்கலைகழக தேர்வில் சாதி ரீதியான கேள்வி கேட்டது குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைப்பு. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பருவ தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டங்களை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில் தவறிழைத்தோர் மீது துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் உயர்கல்வித்துறை உறுதி அளித்திருந்தது. […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவினை தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 54-வது பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.இந்நிலையில்,மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவினை தமிழக அரசு புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.அரசை ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கான தேதி முடிவு செய்யப்பட்டதால், பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மேலும்,பல்கலைக்கழகங்கள்,மாணவர்களிடையே தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அரசியலை புகுத்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும், குறிப்பாக,பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழா […]
மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம் மூலம்,பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க 12 ஆம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவியர்கள் கல்லூரியில் சேர்ந்து அவர்களின் படிப்பு முடியும் வரை வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி,மாதம் ரூ.1000 பெரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முன்னதாக ஜூன் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,ஜூலை 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,மூவலூர் […]
கடந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது,தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும்,மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும்,விருதுநகர் மாவட்டம் – திருச்சுழி;கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர்;ஈரோடு மாவட்டம் – தாளவாடி;திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம்;திருநெல்வேலி மாவட்டம் – மானூர்;திருப்பூர் மாவட்டம் – தாராபுரம்;தருமபுரி மாவட்டம் – எரியூர்;புதுக்கோட்டை மாவட்டம் -ஆலங்குடி;திருவாரூர் மாவட்டம் – கூத்தா நல்லூர்;வேலூர் மாவட்டம்-சேர்க்காடு ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் […]
கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணச்சந்திரனை நியமித்தது செல்லாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, ஊட்டி அரசுக் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, கல்லூரிக் கல்வி இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகத்தில் 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில்,தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்து உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று (ஜூன் 22-ம் தேதி) முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். அதன்படி,www.tngasa.org என்ற […]
அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்து உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி,அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை (ஜூன் 22-ம் தேதி) முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். அதன்படி,www.tngasa.org என்ற இணையதள முகவரியில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க […]
ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற உயர்கல்வித்துறை உத்தரவு. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டது. இதனடிப்படையில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, […]
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22-ம் முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு. தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்து உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22-ம் முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை […]
தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது.இந்நிலையில்,பொறியியல் கல்லூரிகளில் பி.இ.,பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் பதிவு முறை தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி,பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணைய தளம் மூலம் ஜூலை 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.குறிப்பாக,அரசுப்பள்ளி,தனியார் பள்ளிகள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்,மேலும்,இதற்காக 110 சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, ஜூலை 20-31 ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதனிடையே,ஜூலை 22 ஆம் தேதி […]
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து,அரசுக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட 545 பேராசிரியர்களின் பணி நிரந்தரத்துக்கான அறிவிப்பு வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக உள்ளதாக தகவல். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து,அரசுக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட 545 பேராசிரியர்களை,தற்போது பணியாற்றி வரும் கல்லூரிகளிலேயே நிரந்தரமாக பணியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில்,பேராசிரியர்கள் பணியாற்றி வரும் கல்லூரிகளின் விவரங்களை,அனுப்பி வைக்க கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,வருகின்ற பட்ஜெட் […]
பிப்.1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் தேர்வே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை விளக்கம். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டியிருந்தது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் […]
பல்கலைக்கழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அனைத்து பல்.கழக பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக அனைத்து கல்லூரிகள்,பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனவரி 20 வரை விடுமுறை வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்,தங்கள் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,பாடத்திட்டத்தை மாற்றியமைத்த பின்னர்,தமிழ்,புள்ளியியல்,கணித பாடங்களை மட்டும் ஆய்வு பணிகளுக்காக அரசுக்கு அனுப்பலாம் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பாரதியார் பெயரிலும்,வ.உ.சி. பெயரிலும் ஆய்வு இருக்கைகள் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவு. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரிலும்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வ.உ.சி. பெயரிலும் ஆய்வு இருக்கைகள் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.சிண்டிகேட்டின் ஒப்புதலைப் பெற்று பதிவாளர்கள் பணிகளை தொடங்க உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும்,திருவள்ளுவர்,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காகிதமில்லா செமஸ்டர் தேர்வுகளை நடத்தவும் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.அதன்படி,வரும் செமஸ்டர் தேர்வுகளிலேயே 20% தேர்வை காகிதமில்லா முறையில் நடத்தவும் […]
தமிழகத்தில் 37 அரசு கல்லூரிகளில் புதிய முதல்வர்களை நியமித்து, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 37 அரசு கலை அறிவியல், கல்வியியல், ஒட்டி தேர்வு பயிற்சி கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கல்லூரிகளிகளில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர்கள் முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதல்வர்கள் உடனடியாக பணிக்கு சேருமாறு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். பெரம்பலூர், ஓசூர், கொடைக்கானல், நாகர்கோவில், தேனி கலை & அறிவியல் கல்லூரிகளுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர், அவிநாசி, சங்கரன்கோவில், தரங்கம்பட்டி, வானூர் […]
அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.ஆனால்,தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி விட்டு, தற்போது […]
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை. சென்னை கொளத்தூரில் ஸ்ரீ கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை, அறிவியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் தற்காலிகமாக தனியார் மற்றும் திருக்கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 4 கல்லூரிகளிலும் BCA, B.Com., BBA., B.Sc., ( […]