சென்னை : நேற்று தூர்தர்சன் தமிழ் (பொதிகை) தொலைக்காட்சியின் பொன்விழா ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி மட்டும் நடைபெறும் அறிவிக்கப்பட்டு இருந்தால் ஆரம்பம் முதலே எதிர்ப்பு எழுந்திருக்காது. ஆனால், இந்த நிகழ்ச்சியுடன் சேர்த்தே ஹிந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழாவும் நடைபெரும் என அறிவிக்கப்பட்டதால் நேற்றைய நிகழ்ச்சி ஆரம்பமாகும் முன்னரே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எதிர்ப்பு என பல்வேறு எதிர்ப்புகளை இந்த நிகழ்ச்சி பெற்றுவிட்டது. ஹிந்தி மாதம் என்பது ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் கொண்டாடட்டும். […]
சென்னை : ஆளுநர் ரவி நேற்று கலந்து கொண்ட இந்தி மாதம் நிறைவுக் கொண்டாட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகளை விட்டுவிட்டுப் பாடியது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட பலரும் ஆளுநர் பற்றி விமர்சித்து தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, ஆளுநர் மீது இந்த விவகாரத்தில் அதிகமான விமர்சனங்கள் எழுந்த காரணத்தால் ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து இதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. அதில் ” தமிழ் […]
சென்னை : இந்தி மாதம் நிறைவுக் கொண்டாட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியவர்கள் ‘தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகளை விட்டுவிட்டு பாடிய சம்பவம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்ப்ட பலர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும், மக்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைத்தும் […]
சென்னை : நேற்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும் போது திராவிடம் என்கிற வார்த்தை விட்டு விட்டு பாடப்பட்டதால் பெரிய சர்ச்சையை வெடித்தது. இதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் என பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஆளுநர் ரவி, இனவாத கருத்தைத் தெரிவித்து, என் மீது பொய்யான […]
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா பெரும் சர்ச்சையில் முடிந்துள்ளது. சர்ச்சைகள் ஏற்பட முக்கிய காரணமே, நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு பாடியது தான். மு.க.ஸ்டாலின் கண்டனம் இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” ஆளுநரா? ஆரியநரா? என்ற […]
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு விட்டு அதற்கு அடுத்த வரியான தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே பாடல் வரி பாடப்பட்டது. திராவிடம் என்கிற வார்த்தை விட்டு விட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் பெரிய சர்ச்சையே வெடித்தது. இதற்கு பலரும் தங்களுடைய கண்டனங்களை […]
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு விட்டு அதற்கு அடுத்த வரியான தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே பாடல் வரி பாடப்பட்டது. இதன் காரணமாக ஆளுநர் ரவி பங்கேற்ற விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டதா? என […]
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். இந்த விழா தொடங்கியது எதிர்ப்புகளுக்கு மத்தியில் முடிந்தது சர்ச்சையில் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இந்தி திணிப்பு எனப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து […]
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதும், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் ஆளுநர் முன்னிலையில், அங்கிருந்தவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாடினார்கள். தொடக்கத்திலே தடுமாறி தான் பாடிக்கொண்டு இருந்தார்கள். அப்போது, “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” […]
Edappadi Palanisami: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசியுள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. இதன்போது கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக தலைவர்களும் உடன் இருந்தனர். Read More – மக்களவை தேர்தல்..! விறுவிறுப்பாக நடைபெற்ற திமுக மற்றும் அதிமுக வேட்பாளர் நேர்காணல் சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு என்றும் சமீபத்தில் பறிமுதலான […]
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை பல்வேறு சோதனைகளுக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இதன்பின், 5 நாட்கள் காவலில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்தியது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 19-வது முறையாக வரும் 15-ம் தேதி வரை அண்மையில் நீட்டிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் கடந்த ஆக.12-ம் தேதி […]
நாட்டின் 75வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் சென்னை மெரினாவில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனிடையே, குடியரசு தினவிழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து காணொளி மூலம் உரையாற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஆளுநர் கூறியதாவது, தமிழக […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வதற்காகத் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று அங்கு சென்றுள்ளார். இந்த சூழலில், முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்காமல் ஆளுநர் ரவி, இன்று துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசுவதாக கூறி பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, சேலத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு […]
பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ஜெகநாதன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் காவல்துறையில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில்” போலி ஆவணங்கள் தயாரித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ‘பூட்டா்’ அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளனர் என தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் காவல்துறை கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி கைது […]
தமிழக அரசு நிறைவேற்றும் சட்ட மசோதா மற்றும் உத்தரவுகளுக்கு உரிய நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மறுக்கிறார் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் பல முறை முறையிட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி, தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, தமிழக அரசின் உத்தரவுகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஒப்புதல் அளிக்காமல் அதனை தாமதப்படுத்தி வருகிறார் என கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் […]
சேலத்தில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே 50 லட்சம் கையெழுத்துக்களை வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளோம். தமிழக அரசு ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஆளுநரின் செயல்பாடு உள்ளது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும்…பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்! சங்கரய்யா ஒரு விடுதலை […]
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரையில் ஆளுநர் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளார். ஒரு ஆளுநர் இந்தளவுக்கு பிரச்னைக்குரிய நபராக மாறியது என்பது இதுவரை தமிழக வரலாற்றில் கிடையாது. எவ்வளவு சிரமங்களை சந்தித்தாலும், அதைப்பற்றி அக்கறை […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்துள்ள பிராமண பாத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் அலுவலகம் சார்பில் பிராமண பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதித்து வந்த ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது. தமிழ்நாடு அரசு: அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் வில்சல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், எந்த […]
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மசோதாக்கள் தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. 10 மசோதாக்களை திருப்பி அனுப்பிய […]