மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவினை தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 54-வது பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.இந்நிலையில்,மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவினை தமிழக அரசு புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.அரசை ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கான தேதி முடிவு செய்யப்பட்டதால், பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மேலும்,பல்கலைக்கழகங்கள்,மாணவர்களிடையே தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அரசியலை புகுத்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும், குறிப்பாக,பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழா […]
தமிழகத்தில் உள்ள பொறியியல்,கலை&அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.163 அரசு,கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவுற்ற நிலையில்,தற்போது அவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது:”சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பிஇ,கலை&அறிவியல் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் நீட்டிக்கப்பட்டுள்ளது.எனினும்,சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு […]
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நிலையில்,அப்பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது.அதில் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்படும் எனவும்,அதன்படி 10% இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Msc biotech படிப்புக்கான விண்ணப்ப படிவத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் […]
தமிழகத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கைக்கான அட்டவனையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: “தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூலை 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.மேலும்,புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். நீட் தேர்வுக்கு பின்னரே பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும்.இது தொடர்பான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும். பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாகவே நடைபெறும்.பொறியியல் கல்லூரிகளில் பழைய செமஸ்டர் கட்டணங்களே […]
மத்திய பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவதை கைவிடக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில்,மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வால் மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களின் உரிமை பாதிக்கப்படாது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மத்திய அமைச்சர் கூறியிருப்பதாவது:”தேசியக் கல்விக் கொள்கை 2020, பல்வேறு நிபுணர்களுடன் விரிவான மற்றும் அதிக பங்கேற்பு கலந்தாய்வு செயல்முறைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டது […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.மேலும்,தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்: “25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றப்படவுள்ளது.தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார். மேலும்,உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்கள் உயர்கல்வி பயில அனைத்து உதவிகளையும் தமிழக […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைக்கான சட்டமுன்வடிவை பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை தாக்கல். அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2021-ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைக்கான சட்டமுன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்கிறார்.