"தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா" – எம்பி கனிமொழி!

"Grandfather Anna is the one who sowed the great movement of DMK" - MP Kanimozhi!

பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு நாளையொட்டி,தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா எனவும்,அதிகாரக் குவியலை உடைத்து, கூட்டாட்சித் தத்துவத்தைப் பேணிக் காப்போம் எனவும் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில்,தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா எனவும்,அதிகாரக் குவியலை உடைத்து, கூட்டாட்சித் தத்துவத்தைப் பேணிக் காப்போம் எனவும் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

“தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா.மாநில சுயாட்சியின் மையப்புள்ளியும் அவரே.அவரது நினைவு நாளான இன்று, நமது உரிமைகளைத் தேக்கி வைத்திருக்கும் அதிகாரக் குவியலை உடைத்து, கூட்டாட்சித் தத்துவத்தைப் பேணிக் காப்போம் என உறுதியேற்போம்,என்று தெரிவித்துள்ளார்.

unknown node