தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து மக்கள் தத்தளித்தனர். வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று ஆய்வு செய்து உணவுகளை வழங்கி வருகிறார். தனது சொந்த நிதியில் இருந்து தினமும் சாப்பாடுகளை செய்து மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். தூத்துக்குடி மட்டுமின்றி எம்பி கனிமொழி கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வெள்ளத்தால் சிக்கி […]
மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகரில் படகு போட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டியை எம்பி கனிமொழி கொடியசைத்து தோடங்கி வைத்தார். நேற்று உலகம் முழுக்க மீனவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்த மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சிறிய ரக மோட்டார் படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தூத்துக்குடி எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த […]
தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில்,நேற்று 686 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக,சென்னையில் மட்டும் 294 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,திமுக மகளிரணி செயலாளரும்,எம்.பி.யுமான கனிமொழி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு முன்னதாக,கடந்த 2021 ஆம் ஆண்டு எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில்,தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி […]
பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு நாளையொட்டி,தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா எனவும்,அதிகாரக் குவியலை உடைத்து, கூட்டாட்சித் தத்துவத்தைப் பேணிக் காப்போம் எனவும் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில்,தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா எனவும்,அதிகாரக் குவியலை உடைத்து, கூட்டாட்சித் தத்துவத்தைப் பேணிக் காப்போம் எனவும் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் […]
மாற்றியமைக்கப்பட்ட இந்திய நாடாளுமன்றக் குழுக்களில் தமிழக எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளுக்கான நாடாளுமன்ற குழுக்களை மத்திய அரசு மாற்றியுள்ளது.அதன்படி, மாற்றியமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவில் தமிழகத்தை சேர்ந்த தி.மு.க எம்.பி.க்களும் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில்,உரம், வேதிப்பொருள் துறையின் நாடாளுமன்ற குழு தலைவராக தி.மு.க எம்பி கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துறையின் உறுப்பினராக அந்தியூர் எம்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து,சுகாதாரத்துறை உறுப்பினராக தி.மு.க எம்பி கனிமொழி சோமு, எம்பி செந்தில்குமார் ஆகியோரும் சட்டத்துறை உறுப்பினர்களாக […]
கவுஹாத்தி ஐ.ஐ.டி. பாலியல் பலாத்கார வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என்று எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 28 ஆம் தேதியன்று இரவு, ஐஐடி கவுகாத்தியில் மாணவி ஒருவர், அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதன் பின்னர், சம்பவ இடத்தில் இருந்து அடுத்த நாள் மீட்கப்பட்டு அம்மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவர் ஏப்ரல் 3-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கவுகாத்தி […]
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலைஞரின் நிழலாக தொடர்ந்தவர்,என்னைப் போன்ற பலருக்கும் வழிகாட்டி என்று எம்பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு முதலில் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,”தலைவர் கலைஞர்,பேராசிரியர் அன்பழகன் இடத்தில் துரைமுருகன் உள்ளார்.அவர் பொன்விழா நாயகன்.கலைஞரின் அருகில் […]