கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை! இன்றைய ரேட் இதோ!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.1,200 உயர்ந்து சவரனுக்கு ரூ.1,07,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Hero Image

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையானது இன்று மீண்டும் கடுமையான ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. நகை சந்தையில் நிலவும் கடும் போட்டி மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஒரே நாளில் கணிசமாக உயர்ந்துள்ளது. இன்றைய (ஜூலை 02, 2026) காலை நிலவரப்படி தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 வரை உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து, ரூ.13,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,200 உயர்ந்து, ரூ.1,07,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் தற்பொழுது கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து, ரூ.2,50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.