Author: Castro Murugan

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா களம் கண்டார். அதே நேரத்தில் இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவரான அனுரா குமாரா திஸாநாயக்க போட்டியிட்டார். இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க  வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் இழுபறி நீடித்த நிலையில் 2-வது விருப்ப […]

#Srilanka 2 Min Read

“சுயமரியாதை விட எதுவும் பெரிதல்ல” CWC யிலிருந்து விலகுவதாக அறிவித்த மணிமேகலை!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்களில் ஒருவர் என்றால் மணிமேகலையை கூறலாம். இவர் நடந்து முடிந்த மூன்று சீசனங்களில் கோமாளியாக கலந்து கொண்டு இருந்த நிலையில் , இந்த சீசன் தொகுப்பாளராக களம் இறங்கினார். இந்த நிலையில், தன்னுடைய ஆங்கரிங் வேலையை சரியாக ஒருவர் செய்யவிடவில்லை என கூறி, திடீரென தான் குக் வித் கோமலிலிருந்து விலகிக் கொள்வதாக அதிர்ச்சி கலந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் […]

CookWithComali 7 Min Read
cook with comali 5

யுஜிசி நெட் தேர்வு நேற்று ! இன்று ரத்து ! -கல்வி அமைச்சகம்

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) புதன்கிழமை, யூஜிசி-நெட் (பேராசிரியர் மானியம் ஆணையம் – தேசிய தகுதித் தேர்வு) தேர்வை ரத்து செய்வதாக முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. “தேர்வு செயல்முறையின் மிகுந்த வெளிப்படைத்தன்மை மற்றும் புனிதத்தைக் காக்க, இந்திய அரசின் கல்வி அமைச்சகம் யூஜிசி-நெட் ஜூன் 2024 தேர்வை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. புதிய தேர்வு நடத்தப்படும், அதற்கான தகவல் தனியாக பகிரப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் முழுமையான விசாரணைக்காக மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு […]

3 Min Read
CUET Exam

துன்பத்தில் இருக்கும் 86% இந்திய ஊழியர்கள் ? தரவுகள் கூறுவது என்ன?

இந்திய ஊழியர்களில் வெறும் 14% பேர் மட்டுமே “வெற்றிகரமாக வாழ்கிறோம்” என்று கருதுகின்றனர், ஆனால் இது உலக அளவில் சராசரியான 34% க்கு மிகக் குறைவாக உள்ளது என்று Gallup 2024 உலக பணிமனையின் நிலை அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், அமெரிக்க ஆழ்வாய்வு நிறுவனத்தின் கணக்குப்படி, 86% ஊழியர்கள் தங்களை ‘துன்பப்படும்’ நிலையில் உள்ளவர்களாக தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். நல வாழ்வு வகைப்படுத்தல் உலகளாவிய ஊழியர் மனநலம் மற்றும் நல வாழ்வை மதிப்பீடு செய்யும் இந்த […]

Indian Employee 7 Min Read
Indian Employee

மெக்சிகோ அதிபர் தேர்தல்.. 200 ஆண்டுகள் கழித்து பெண் வேட்பாளர் வெற்றி.!

மெக்சிகோ : கிளாடியா ஷெயின்பாம் மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக பெரும் வெற்றியை பெற்றுள்ளார். இவர் தனது வழிகாட்டியும் தற்பொழுது அதிபராக இருக்கும் ஆண்ட்ரஸ் மனுவேல் லோபெஸ் ஓப்ரடோரின் திட்டங்களை  தொடரவுள்ளார். கிளாடியா ஷெயின்பாம், ஒரு காலநிலை விஞ்ஞானி மற்றும் மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயரும் ஆவார். இவர், 58.3% முதல் 60.7% வரை வாக்குகளைப் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார். இது மெக்சிகோவின் ஜனநாயக வரலாற்றில் உயர்ந்த வாக்கு சதவிகிதமாகும். அதிபர் அணியினரின் கூட்டணி இரு அவைகளிலும் […]

#Mexico 4 Min Read
Default Image

காசா போர் : இஸ்ரேலியர்கள் நுழைய தடை…மாலத்தீவு அரசு முடிவு!

காசாவில் நடந்து வரும் போரால் மாலத்தீவுகளில் மக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் பாஸ்போர்ட்டை கொண்டவர்களுக்கு நாட்டு நுழைவைத் தடை செய்வதாக மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது. மாலத்தீவின் அதிபர் அலுவலகம், கடந்த ஞாயிற்றுக்கிழமை, வெளியிட்டுள்ள அறிவிப்பில் இஸ்ரேல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு நுழைவைத் தடுக்க சட்ட மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்ததாகவும், இந்த செயல்முறையை கண்காணிக்க ஒரு துணைக்குழுவை அமைப்பதாகவும் அறிவித்தது. அதிபர் முகமது முவிசு பாலஸ்தீன மக்களின் தேவைகளை மதிப்பீடு செய்ய சிறப்பு தூதரை நியமித்து, நிதி […]

#Gaza 3 Min Read
Default Image

திகார் சிறையில் சரணடைந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திகார் சிறையில் சரணடைந்தார். லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதற்கான கால அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில் இன்று திகார் சிறையில் சரணடைந்தார். கடந்த மே 10 அன்று உச்சநீதிமன்றம் டெல்லி மதுவிலக்கு கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை இடைக்கால ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது. மேலும்  ஜூன் 2 அன்று சரணடையுமாறு அறிவுறுத்திருந்தியதை தொடர்ந்து இன்று  சரணடைந்துள்ளார். சிறைக்கு […]

#Tihar Jail 4 Min Read
Default Image

அருணாச்சலத்தில் பாஜக முன்னிலையில், சிக்கிமில் ஆளும் எஸ்கேஎம்-சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

டெல்லி:அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19 அன்று 60 பேரவைத் தொகுதிகள் உள்ள அருணாச்சல் பிரதேசம் மற்றும் 32 தொகுதிகள் உள்ள சிக்கிம் ஆகிய இடங்களில் மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்துடன் இணைந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆரம்பகால முடிவுகளின் படி, அருணாச்சல் பிரதேசத்தில் பாஜக 60 இடங்களில் 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, இதில் […]

#BJP 3 Min Read
Default Image

உலகமுழுவதும் முடங்கியது வாட்ஸப் எக்ஸ் தளத்திற்கு படையெடுத்த பயனர்கள்

Whatsappdown:உலக முழுவதும் 3 பில்லியன் பயனர்களை கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் மெசேஜிங் செயலியான வாட்ஸப் தற்பொழுது இந்தியா உட்பட  உலகமுழுவதும் முடங்கியுள்ளது.புதன்கிழமை இரவு 11.45 க்கு வாட்ஸப்பின் சேவை முடங்கியுள்ளது இதற்கான காரணம் என்னவென்று மெட்டா நிறுவனம்இதுவரை  தெரிவிக்கைவில்லை. வாட்ஸப் பயனர்கள் செயலி மற்றும் இணையதளத்தில்  பயன்படுத்தமுடியவில்லை என்றும் சிலருக்கு இன்ஸ்டாகிராமும் இயங்கவில்லை என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த வருடத்தில் மெட்டா நிறுவனம் சந்திக்கும் இரண்டாவது மிகப்பெரிய செயலிழப்பாகும். இணைய செயலிழப்பை கண்காணிக்கும் பிரபல நிறுவனமான டவுன்டெக்டர் […]

WhatsApp 3 Min Read

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் செயல்படவில்லை

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவை தாய் நிறுவனமான மெட்டாவில் பெரும் செயலிழப்பு ஏற்ப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் பயனர்கள் செயலிகள் மற்றும்  இணையதளங்களை வழக்கம் போல் பயன்படுத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயப்படுத்திக்கொண்டிருந்த பயனர்கள் செயலிகள் தன்னிச்சையாக லோக்அவுட் ஆகியுள்ளது .இதன் பின்னர் பயனர்கள் உள்ளே செல்ல முயற்சித்தபொழுது அவர்களால் உள்ளே செல்ல முடியாத நிலையே தற்பொழுதுவரை நீடிக்கிறது இந்த பிரச்சனைகள் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.இது குறித்து பயனர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் . […]

Facebook Down 3 Min Read
facebook down

மினரல் vs கெமிக்கல் சன்ஸ்கிரீன்: எதை தேர்ந்தெடுக்க வேண்டும்??

  பல்வேறு வகையான க்ரீம்கள் மற்றும் சன்ஸ்கிரீன்கள் இருப்பதால், நுகர்வோர் தங்கள் சருமத்திற்கான சிறந்த தேர்வு என்ன என்பதை குறித்து குழப்பமடைகிறார்கள். இரசாயன சன்ஸ்கிரீன் இவை ஆக்ஸிபென்சோன், ஆக்டினாக்சேட், ஆக்டிசலேட் மற்றும் அவோபென்சோன் போன்ற கரிம சேர்மங்களைக் கொண்டிருக்கின்றன. நன்மைகள் *சன்ஸ்கிரீன் மூலக்கூறுகள் பயன்பாட்டிற்குப் பிறகு ஒன்றாக பிணைக்கப்படுவதால், பாதுகாப்பிற்காக உங்களுக்கு ஒரு சிறிய அளவு மட்டுமே தேவைப்படும். *இவை மெல்லியதாகவும், தோலில் சமமாக பரவும் தன்மையுடையதாகவும் இருக்கும். * சருமத்தில் உறிஞ்சப்பட்டவுடன், அது புற ஊதா […]

Beauty Tips 6 Min Read
sunscreen

டைப்-2 நீரிழிவு நோயைத் தடுக்க வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றங்கள்..

  ப்ரீ-டயாபடீஸ் என்றால் என்ன? ப்ரீ-டயாபடீஸ் என்பது நீரிழிவு நோய்க்கு முந்தைய அறிகுறி மற்றும் ஆரம்ப அறிகுறியாகும். உங்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவும் ஒரு குறிகாட்டியாகும். நீங்கள் முன் நீரிழிவு நோயால் கண்டறியப்பட்டிருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க நீங்கள் விழிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  டைப்-2 நீரிழிவு போலல்லாமல், முன் நீரிழிவு நோய் மீளக்கூடியது. வாழ்க்கை முறை மாற்றங்கள், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம், உங்கள் […]

Diet Changes 5 Min Read
diabetic 2 food

இந்தியா முழுவதும் தீபாவளி போல கொண்டப்பட்ட ராமர் கோவில் திறப்பு விழா..!

அயோத்தியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் திறப்பு விழாவை நேற்று நாடு முழுவதும் கொண்டாடிய நிலையில் ராமர் கோஷங்கள், சுவரொட்டிகள், காவி கொடிகள் மற்றும் பட்டாசுகளுடன் தீபாவளி போன்ற உற்சாகத்தில் மூழ்கியது. மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற தலைவர்கள் உட்பட பலர் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி கொண்டாடினர். ​​சிலர் தெருக்களில் சிறப்பு விளக்குகளை ஏற்றியும், பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்கள்  உட்பட பலர் தங்கள் வீடுகளில் ‘தீபோத்ஸவ்’ […]

Ayodha Ram Mandir 10 Min Read
Ram Lalla

அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் குலுங்கும் ஜப்பான்.. சுனாமி அலைகளால் அதிர்ச்சி! பதபதவைக்கும் வீடியோ காட்சிகள்…

ஜப்பானில் மேற்கு பகுதிகளில் இன்று பிற்பகல் (இந்திய நேரப்படி) 12 மணிக்கு மேல் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 3 மணிநேரத்தில் ஜப்பானின் மேற்கு கடலோர பகுதிகளில் சுமார் 30 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியானது. இதில், 5.5 ரிக்டர் அளவு முதல் 7.6 ரிக்டர் அளவு வரை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 2024ம் ஆண்டின் முதல் நாளிலேயே ஜப்பானில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் […]

#Earthquake 6 Min Read
japan tsunami

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்…!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில், விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. பின்னர், அதிக சளி இருப்பதன் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். மேலும் […]

Captain Vijayakanth 4 Min Read
vijayakanth

அரைசதம் விளாசிய சூர்யா குமார் யாதவ், ரிங்கு சிங்.. மழையால் போட்டி 15 ஓவராக குறைப்பு ..!

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறவிருந்த போது  மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர் 2-வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில்  டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதைதொடர்ந்து, முதலில் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.  இருவருமே […]

india 4 Min Read

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு..!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல்  போட்டி நேற்று முன்தினம் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கான 2-வது போட்டி இன்று […]

india 4 Min Read

3வது டி20 போட்டி இன்னும் சில மணிநேரங்களில்… 4வது 5வது டி20 நடப்பதில் சிக்கல்….

இந்தியா – வேஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மோதும் 3வது டி20 போட்டி  ஒன்றரை மணி நேரம் தாமதமாகி இன்று 9.30 மணிக்கு 3வது டி20 போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு டி20 போட்டிகள் முடிந்து விட்டன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடைபெற உள்ளது.  […]

india 4 Min Read
Default Image

கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா.?

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்பொழுது நடிக்க உள்ள திரைப்படம் “கேப்டன் மில்லர்”.  இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும்,  படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும்  முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதற்கான தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. அதன்படி, படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும் 1-ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம். இதையும் படியுங்களேன்- நீல நிற உடையில் கவர்ச்சி.! […]

- 3 Min Read
Default Image

வேலுமணிக்கு எதிரான வழக்கு – அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது பல்வேறு பணிகளுக்கு, டெண்டர் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து எஸ்.பி. […]

#AIADMK 3 Min Read
Default Image