பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு, நினைவு இடத்திற்கும் சென்று அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், திமுக சார்பி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதி பேரணி இன்று காலை நடைபெற்றது. இந்த பேரணியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி சென்ற திமுக பேரணி, சென்னை மெரினாவில் […]
அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்க மத்திய அரசை அகற்றியே தீருவோம் என்று அண்ணா நினைவு நாளையொட்டி திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. அண்ணா நினைவு நாளில் அவரது நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணி நடத்தி அஞ்சலி செலுத்த வேண்டும். எந்த நாட்டைச் சுற்றினாலும் தென்னாட்டுக் காந்தி என்று போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா நம்மோடுதான் இருப்பார். அண்ணா வழியில் அயராது […]
பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு நாளையொட்டி,தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா எனவும்,அதிகாரக் குவியலை உடைத்து, கூட்டாட்சித் தத்துவத்தைப் பேணிக் காப்போம் எனவும் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில்,தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா எனவும்,அதிகாரக் குவியலை உடைத்து, கூட்டாட்சித் தத்துவத்தைப் பேணிக் காப்போம் எனவும் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் […]
அண்ணா நினைவு நாளையொட்டி வழிபாடு மற்றும் பொது விருந்து அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அண்ணா நினைவு நாளையொட்டி வழிபாடு மற்றும் பொது விருந்து அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதனால் கடந்த 26-ஆம் தேதி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் […]