படிப்படியாக வளர்ந்து வந்தவன் நான்., ஊர்ந்து வந்தவர் முதல்வர் பழனிசாமி – முக ஸ்டாலின்

Stalin said the DMK was a movement that could be with the people, whether it was in power or not.

திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இருக்கக் கூடிய இயக்கம் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் விடும் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பழனிசாமி ஏன் செல்லவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். உறவினருக்கு டெண்டர் கொடுத்ததற்கு முகாந்திரம் உள்ளதாக நீதிமன்றம் கூறியது என்றும் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இருக்கக் கூடிய இயக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த இடத்திற்கு தான் படிப்படியாக வளர்ந்து வந்தவன் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து ஊர்ந்து வளர்ந்தவர் எனவும் விமர்ச்சித்துள்ளார்.

இதையடுத்து, பத்மநாமபுரம், விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.