மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் நாளை முதல் அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு – தமிழக அரசு

The Government of Tamil Nadu has announced an exemption for disabled civil servants from coming to office from tomorrow.

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் நாளை முதல் அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நாளை முதல் 20ம் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அதிகபட்சம் 50 சதவீதம் பாண்டியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாற்று திறனாளி அரசு பணியாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நாளை முதல் 20ம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கின் போது மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

unknown node
மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் நாளை முதல் அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு – தமிழக அரசு