சி,டி பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு உச்ச வரம்பிற்குட்பட்டு ரூ.3,000 மிகை தொகை வழங்கப்படும் என அறிவிப்பு. 2021-2022-ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு, அரசின் நலத் திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு […]
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீத உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வலியுறுத்தல். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி ஜூலை முதல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் சேவைப் பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பணியினை மேற்கொள்ளும் […]
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தது அம்மாநில அரசு. புதுச்சேரியில் குருப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ ஊழியர்களுக்கு ரூ.6,908, முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,184 போனஸ் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு […]
அரசு ஊழியர்களின் விடுப்புக்கான பணப்பலன் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு. டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு விடுப்புக்கான பணப்பலன் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களின் விடுப்புக்கான பணப்பலன் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படாது என்று விதிகளில் திருத்தம் செய்து அரசு […]
பெண் பணியாளர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெயிட்டுள்ளது. வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தத்தெடுப்பு விடுப்பிற்கு நிகராக மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை […]
தகுதியான ஊழியர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவு. அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தகுதியுள்ள அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும். ஓய்வுபெறும் நாளென்று செயற்கை பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் பதவி உயர்வு பெற்று முழு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 25 அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வீடு கட்டாமலேயே கட்டியதாக ரூ.7 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 2016 முதல் 2020 வரை அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் 480 வீடுகள் கட்டியதாக மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. 480 வீடுகள் கட்ட பயனாளிகளுக்கு ரூ.7 கோடி வரை பணம் தந்து மோசடி செய்ததாக 25 அரசு ஊழியர்கள் […]
ஓய்வுபெறும் நாள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு விளக்கம். தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டு, தற்போது 60 ஆக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்கள் எந்த நாள் ஒய்வு பெற வேண்டுமோ, அந்த நாளில் இல்லாமல், அந்த மாதத்தின் கடைசி நாளில் ஒய்வு பெறுவார்கள் என ஓய்வுபெறும் நாள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. எனவே, அடிப்படை விதி 56(1)ன் […]
லட்சத்தீவு நிர்வாகம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரசு ஊழியர்களுக்கு சைக்கிள் தினமாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அரசு ஊழியர்களுக்கு சைக்கிள் தினமாக அறிவிக்கப்படுகிறது என்று லட்சத்தீவு நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சைக்கிள் தினம் நாளை (ஏப்ரல் 6) முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து லட்சத்தீவு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி நடைபெற்ற 13-வது லட்சத்தீவு மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (எல்பிசிசி) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, லட்சத்தீவு நிர்வாகம் […]
அரசு ஊழியர்கள் 28, 29ம் தேதி பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் […]
ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு கேட்டு, பணிக்கு திரும்ப தலிபான் அமைப்பு வலியுறுத்தல். ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக தலிபான் அமைப்பினர் அறிவித்துள்ளனர். ஆப்கான் அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமன்னிப்பு வழங்கப்படுவதால் அரசு ஊழியர்கள் முழு நம்பிக்கையுடன் பணிகளை தொடங்கலாம் எனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கு உள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு வேகப்படுத்தி […]
அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 2022 மார்ச் 31 வரை ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நிதி சுமை காரணமாக அடுத்த ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் நாளை முதல் அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நாளை முதல் 20ம் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அதிகபட்சம் 50 சதவீதம் பாண்டியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாற்று திறனாளி அரசு பணியாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நாளை முதல் 20ம் தேதி வரை […]
தபால் வாக்குகள் மே 2 காலை 8 மணி வரை பெறப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்பேரில் தபால் வாக்களிக்க விரும்புபவர்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பில் இருந்து தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 அதாவது, […]
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என சென்னை […]
அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணத்தை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசுப் பணியில் இருக்கும் ஊழியர்கள் சொந்தமாக வீடு கட்டவோ, வாங்கவோ அரசு சார்பில் முன்பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் முன்பணம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, முன்பணம் ரூ.25 […]
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி,அரசு ஊழியர்களாக இருக்கும் ஒரு ஆண், அவரது மனைவி இறந்தவராகவோ, மனைவியை விட்டு பிரிந்தவராகவோ இருந்தால் அவருக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். அதிலும், அந்த குழந்தைக்கு தந்தை மட்டுமே இருப்பின் அவர்கள் குழந்தைகள் கவனிப்பு விடுமுறை (சைல்ட் கேர் லீவ்-சிசிஎல்) எடுக்கலாம். மேலும், குழந்தைகள் மாற்று திறனாளிகளாகவோ ,சிறப்பு குழந்தைகளாக இருந்தாலும் ஆண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய […]
முதற்கட்ட கொரோனா ஊரடங்கில் அரசு அலுவலகங்களில் அத்தியாவசிய பணிகளையுடைய அலுவலகங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, சனிக்கிழமையையும் சேர்த்து வாரத்தின் ஆறு நாட்களை பணி நாளாக அறிவித்து 50 சதவீத ஊழியர்களை கொண்டு பணி நடத்த கடந்த மே 15ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. அதனையடுத்து, விதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வால் சனிக்கிழமை பணிநாள் என்பதுடன் 100 சதவீத ஊழியர்களை பணியில் அமர்த்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது வார்த்தின் 6 நாள் பணி என்பதை வரும் ஜனவரி […]
விவசாயிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சூர்யா பிரகாஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அவரது வழக்கில்,தமிழகம் முழுவதும் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்,விவசாயிகளிடம் இருந்து விரைவாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் .மேலும் விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 லஞ்சமாக அதிகாரிகள் வாங்குவதாகவும் என்று தெரிவித்தார். விவசாயிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது பிச்சை […]