மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பாதையை நாளை திறப்பு வைக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை வசதியை நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறப்பு வைக்கிறார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அறிவிப்பில், சென்னை மெரினா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதை நாளை திறந்து வைக்கப்பட உள்ளது. விரைவில் பெசன்ட் நகரிலும் சிறப்பு பாதைக்கான பணிகள் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளது. மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிக்கான […]
டெல்லி:மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கிய மாநிலத்திற்கான தேசிய விருதை டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுள்ளார். உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை அறிவுரைப்படி, உலகம் முழுவதும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமானது டிசம்பர் 3 ஆம் தேதி அனுசரிக்கின்றது. அந்த வகையில்,டெல்லியில் மாற்றுத் திறனாளிகள் உரிமை ஏற்றத்தை ஊக்குவித்ததற்கான தேசிய விருது […]
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று பராமரிப்பு உதவித்தொகை வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.அதன்படி இந்த நிகழ்ச்சியில்,கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு ரூ. 1500 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை முதல்வர் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணியாற்றி […]
மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியின்றி புதிய பேருந்துகளை வாங்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பேருந்துகள் இயங்கவில்லை என்றும் அவர்களின் வசதிக்காக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் வைஷ்ணவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, 10% மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் தான் பேருந்துகள் கொள்முதல் செய்ய போக்குவரத்துக்கழகம் முடிவு செய்திருப்பதாகவும், இது மாற்றுத்திறனிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றும் அதனை ரத்து செய்ய […]
தர்மபுரியில் மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள மருத்துவ குழுவினர். தருமபுரி மாவட்டம் அரூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மதிவாணன். மாற்றுத்திறனாளியான இவர் பாட்சாபேட்டையில் வசிக்கிறார். இவருக்கு தடுப்பூசி போடும் முகாமிற்கு செல்வதில் சிரமங்கள் இருப்பதாக அந்த ஊர் மருத்துவ அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தனது இயலாமையை தெரிவித்த மதிவாணனின் அழைப்பை ஏற்று, அரூர் பகுதியின் மருத்துவ அலுவலர் தொல்காப்பியன் தலைமையிலான மருத்துவ குழு ஒன்று அவரது வீட்டிற்கே சென்று […]
மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் நாளை முதல் அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நாளை முதல் 20ம் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அதிகபட்சம் 50 சதவீதம் பாண்டியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாற்று திறனாளி அரசு பணியாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நாளை முதல் 20ம் தேதி வரை […]
மாற்று திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதியில் 4 சதவீதத்தை ஒதுக்க கோரி வழக்கு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இதுவரை தமிழகத்தில் 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா நிவாரண நிதியில் 4 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது […]
12 லட்சம் செலவில் 13500 செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்காக 81000 உதடு மறைவற்ற முகக்கவசம் வழங்கப்படுகின்றன. செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் உடன் அவர்களது பெற்றோர்கள், பாதுகாவலர்கள், உடன் பணிபுரிபவர்கள் ஆகியவர்கள் தகவலை பரிமாற்றம் செய்வதற்கு முக்கியமாக பயன்படுவது உதடு அசைவு . செவித்திறன் மற்றும் வாய் பேச இயலாதவர்கள் உதடு அசைவு மூலம் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்நிலையில் வைரஸ் தொற்று காரணமாக […]
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது சேவை, விளையாட்டு உள்ளிட்ட எந்த துறையாக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பின்னர் பாஜகவின் 6 ஆண்டு கால ஆட்சியில் சுமார் 9 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட முகாம் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற முகாம்களை எளிதில் காண முடியாது என்றும் […]
உலகின் எங்கு இருந்தாலும் தொடர்பு கொண்டு பேச செல்போன்கள் உதவுகின்றன. ஆனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளிகள் அதனை பயன்படுத்த முடியாத சூழலே நிலவி வந்தது. தற்போது மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில் பேசும் காட்சி, அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்து, வைராகி வருகிறது. உலகின் எந்த பகுதியில் இருக்கும் நபரையும் தொடர்பு கொண்டு பேச தொலைபேசிகள் மற்றும் செல்போன்கள் உதவுகின்றன. ஆனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளிகள் அதனை பயன்படுத்த முடியாத சூழலே நிலவி வந்தது. ஆனால் […]
கர்நாடக மாநிலத்தில் சூரிய கிரகணம் நடைபெறும் போது மாற்றுத் திறனாளி குழந்தைககளை கழுத்து வரை மண்ணில் புதைத்த அதிர்ச்சி சம்பவம். இவ்வாறு புதைத்து வைத்தால், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குறைபாடு சரியாகிவிடும் என்ற மூடநம்பிக்கை. அரிய நிகழ்வான வளைய வகை சூரிய கிரகணம் இன்று பல இடங்களில் நிகழ்ந்த நிலையில், கர்நாடக மாநிலம் தாஜ்சுல்தான்பூர் கிராமத்தில் சூரிய கிரகணத்தின் போது சஞ்சனா, பூஜா மற்றும் காவிரி ஆகிய மூன்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் கழுத்து வரை புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை […]