மணிப்பூரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பயங்கர பதற்றம் நிலவி வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மோரே நகரில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் மற்றும் ஒரு BSF வீரர் காயமடைந்தனர். தற்போது, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்னர். முன்னதாக, நேற்றைய தினம் தௌபல் மாவட்டத்தில் உள்ள லிலாங் சிங்சாவ் பகுதியில் குண்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களில் […]
மணிப்பூர் மாநிலத்தில் புதிய வன்முறை வெடித்ததை அடுத்து, மணிப்பூர் அரசு நேற்று (திங்களன்று) தௌபால் மற்றும் இம்பால் போன்ற மேற்கு மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. நேற்று மாலை தௌபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களது உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னர், அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங், லிலாங்கில் வசிப்பவர்களிடம் […]
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கொரோனவால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவ நிபுணர் எச்சரிக்கை. சீனாவை மீண்டும் மிரட்டி வரும் புதிய வகை கொரோனா பரவல், இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அந்தவகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவக்குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டிற்கு வரும்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், அறிகுறி […]
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மருத்துவத்துறை செயலர் விளக்கம். தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், நாட்டில் மீண்டும் கொரோனா பாவல் சற்று தலைதூக்க ஆரம்பித்து உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை […]
உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிக அளவில் காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன், டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு நகரில் உள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவின் வீட்டிற்கு அருகில் நேற்று பிற்பகல் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அங்கு போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து போலீசார் கண்ணீர் புகை மற்றும் […]
போர் பதற்றம் நிலாவை வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு. உக்ரைன் தலைநகர் கீவில் இன்று மாலை முதல் வரும் 28-ம் தேதி காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்று கீவ் மேயர் அறிவித்துள்ளார். போர் பட்டம் நிலவி வரும் நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனிடையே, ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது கடந்த 24 -ஆம் தேதி முதல் தொடர்ந்து 31-வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. […]
தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகம் முழுவதும், இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் […]
ஊரடங்கின்போது அவசர உதவி தேவைப்படுவோர் உதவி எண்ணை வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அமலில் இருந்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு பல்வேறு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கின்போது அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண் 100 மற்றும் 112 […]
சென்னை:தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை தமிழகத்தில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில்,ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை மேற்கொள்கின்றனர். அதன்படி,சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் […]
புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு. கொரோனா மற்றும் ஓமைகாரன் தோற்று பரவலை தடுக்கும் விதமாக புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிப்பு செய்து புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனிடையே நேற்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்த நிலையில், தற்போது புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. உணவகங்கள், […]
ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என டெல்லி முதல்வர் கூறியுள்ளார். உருமாறிய கொரோனா வைரஸின் புதிய வகையான ஓமைக்ரான் வகை தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 50 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. அதிலும் இந்தியாவிலும் இந்த ஓமைக்ரான் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தலைநகர் டெல்லியில் இரண்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதிய வகை வைரஸ் ஓமைக்ரானை எதிர்கொள்ள […]
சென்னை:தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும்,கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சில மாதங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் எனும் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. ஒமிக்ரான் தொற்று இதுவரை 50 நாடுகளுக்குப் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால்,ஒமிக்ரான் பரவுவதை தீவிரமாக தடுக்க அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள […]
புதுச்சேரியில் நாளை 100% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவலை குறைக்கும் விதமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்பொழுது கொரோனா பரவல் குறைத்துள்ளதை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் வரும் நவம்பர் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் புதுச்சேரியில் இரவு நேரம் […]
ஜம்மு-காஷ்மீரில் கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் இன்றிலிருந்து 10 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கை விதித்துள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம், தனித்த மளிகை/காய்கறி/இறைச்சி/பால் கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் மற்றும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீநகரின் மாவட்ட மாஜிஸ்திரேட் முகமது […]
அசாம் மாநிலம் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பெருமளவு பாதித்துள்ளது. அதனால் மாநிலங்களில் பாதிப்புக்கு ஏற்றவாறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அசாம் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும், மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள கொரோனா பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. […]
செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழ்நாட்டில் வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ள நிலையில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்தந்த மாவட்டங்களில் நிலவும் நோய்ப் பரவலின் அடிப்படையில் தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஏற்கெனவே […]
கொரோனா அதிகளவில் பரவியுள்ள காரணத்தால் கேரளாவில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து இருந்தாலும், கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. கடந்த மூன்று தினங்களாக கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து வருகிறது. கொரோனா முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள மாநிலம், இரண்டாம் அலையில் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான […]
ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வருகின்ற திங்கள் கிழமையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இன்று காலை முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில், பள்ளி, கல்லூரிகள் திறப்பு […]
சேலம் மாவட்டத்தில் இன்று முதல் அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, கொரோனா பரவல் மீண்டும் சற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அம்மாவட்ட […]
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் வரும் 28ஆம் தேதி வரை தடை. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலின் தன்மை, அதன் தாக்கம் குறித்து முதல்வர் தலைமையில் இன்று (6-8-2021) தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்குக் கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து மருத்துவ […]