தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வர் ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அதில்,அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் இலவச பயணம் என்பதும் ஒன்று.அதன்படி,நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.இதனையடுத்து,பெண்களை தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே,கடந்த மே 5 ஆம் தேதி,தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர்:” 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைத்து வகை அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்” என்று அறிவித்தார். இதனிடையே,3 – 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட குழந்தைகளுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கியும்,அதனை உடனடியாக அமல்படுத்தவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
unknown node