#ElectionBreaking: ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

The list of 3 candidates of Owaisi's AIMIM party in alliance with Aam Aadmi Party has now been released.

அமமுகவில் கூட்டணியில் உள்ள ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 3 வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியில் தேமுதிக, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி மற்றும் ஒருசில சிறிய கட்சிகள் இணைந்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, அதற்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடுபட்டது. ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு வாணியம்பாடி, சங்கராபுரம், கிருஷ்ணகிரி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில், வரும் சட்டப்பேரவையில் அமமுகவில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி முதல்முறையாக தமிழகத்தில் களம் காண உள்ளது. தற்போது ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வாணியம்பாடி – வக்கீல் அஹமத், சங்கராபுரம் – முஜிபுர் ரஹ்மான், கிருஷ்ணகிரி – அமீனுல்லா ஆகிய வரும் சட்டப்பேரவை தேத்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.