649CC பைக்.. 3 புதிய கலர்கள்! 2027 Kawasaki Z650 S-ல் என்ன ஸ்பெஷல்?

2027 Kawasaki Z650 S புதிய 3 கலர் ஆப்ஷன்களுடன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Hero Image

டெல்லி : உலகப் புகழ்பெற்ற பிரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான கவாசகி (Kawasaki), சர்வதேச மோட்டார்சைக்கிள் சந்தையில் தனது அடுத்த தயாரிப்பான புத்தம் புதிய 2027 கவாசகி Z650 S (2027 Kawasaki Z650 S) பைக்கை மூன்று அசத்தலான புதிய வண்ணத் தேர்வுகளுடன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த மாடலில் இருந்த அதே இன்ஜின், வசதிகள் மற்றும் ஒட்டுமொத்த டிசைனை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ள கவாசகி நிறுவனம், வரவிருக்கும் புதிய மாடல் ஆண்டிற்காக வண்டியின் தோற்றத்தை இன்னும் இளமையாகவும் ஸ்டைலாகவும் மாற்றிக் காட்டியுள்ளது. கவாசகியின் வழக்கமான Z650 பைக்கை விட, நீண்ட தூரம் சொகுசாகப் பயணம் செய்வதற்காக பிரேக் செய்யப்பட்ட ஒரு சிறப்பு மாடல்தான் இந்த Z650 S. இதனுடைய மற்ற சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

என்ன ஸ்பெஷல் இருக்கு?

வழக்கமான கவாசகி Z650 பைக்கை விட இந்த Z650 S மாடலானது ஓட்டுபவருக்கும் பின்னாடி அமருபவருக்கும் சிறப்பான சௌகரியத்தை வழங்கும் வகையில் பிரேக் செய்யப்பட்டுள்ளது. ரைடர் நீண்ட தூரம் ஓட்டும்போது கால்கள் வலிக்காமல் இருக்க, இதனுடைய ஃபுட்பெக்குகள் (Footpegs) முழங்கால் கோணத்தை மிகவும் ரிலாக்ஸ் செய்யும் படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

2027 Kawasaki Z650 S.webp

மேலும், இதிலுள்ள புதிய ஹேண்டில்பார் அமைப்பு ரைடரை நிமிர்ந்து நேராக அமர்ந்து கம்பீரமாக வண்டியை ஓட்ட உதவுகிறது. முக்கியமாக, இதன் சீட்டிங் அமைப்பு முற்றிலும் புதிய வடிவில் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளது. முன்பக்க சீட் மிகவும் அகலமாகவும் தடிமனாகவும் மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம், பின்னாடி அமருபவர்களின் சௌகரியத்திற்காக பில்லியன் சீட் (Pillion Seat) 20 மிமீ கூடுதல் அகலத்துடனும், 10 மிமீ கூடுதல் தடிமனான குஷனுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைக்கேற்ப தேர்வு செய்ய 'ஸ்டைல் சீட்' மற்றும் வண்டியின் உயரத்தை 20 மிமீ வரை குறைத்து உயரக் குறைவான நபர்களும் எளிதாக ஓட்டும் படி உதவும் 'எர்கோ ஃபிட் சீட்' (Ergo Fit) என இரண்டு கூடுதல் ஆப்ஷனல் சீட்டுகளையும் கவாசகி வழங்குகிறது.

மிரட்டலான புதிய 3 கலர்கள்

2027 கவாசகி Z650 S பைக் மொத்தம் மூன்று விதமான புதிய வண்ணக் கலர்களில் களமிறங்கியுள்ளது. இதில் முதலாவதாக இருக்கும் 'பேர்ல் பிளிஸார்ட் ஒயிட்/கேண்டி லைம் கிரீன்' நிறம், வெள்ளை நிற பாடி பேனல்கள் மற்றும் கவாசகியின் பிரத்யேக பச்சை நிற சேசிஸ் மற்றும் பிரண்ட் ஃபெண்டருடன் பார்ப்பதற்கே செம மாஸாக காட்சியளிக்கிறது.

2027 Kawasaki Z650.webp

இரண்டாவதாக இருக்கும் 'கேண்டி பெர்சிமன் ரெட்/மெட்டாலிக் கார்பன் கிரே' நிறம் வண்டிக்கு நல்ல பிரகாசமான ஸ்போர்ட்டி லுக்கைத் தருகிறது. மூன்றாவதாக இருக்கும் 'எபனி/மெட்டாலிக் கார்பன் கிரே' நிறம், சிம்பிளான மற்றும் டார்க் நைட்டிஷ் லுக்கை விரும்பும் பைக் பிரியர்களுக்கான கச்சிதமான தேர்வாக அமைந்துள்ளது.

பவர்ஃபுல் இன்ஜின்

இந்த பைக்கில் சக்திவாய்ந்த 649cc பேரலல் ட்வின் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சிட்டி டிராஃபிக்கிலும் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் வண்டியை மிக ஸ்மூத்தாகவும், அதே சமயம் அசாத்திய வேகத்திலும் செலுத்த உதவும் வகையில் பக்காவாக டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் லிட்டருக்கு தோராயமாக 18 முதல் 22 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2027 Kawasaki Z650 bike.webp

பாதுகாப்பிற்காக இதில் அதிநவீன டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் (Traction Control) கொடுக்கப்பட்டுள்ளது, இது வழுக்கலான சாலைகளிலும் வண்டிக்கு நல்ல கிரிப் மற்றும் ஸ்டெபிலிட்டியைத் தரும். தொழில்நுட்ப வசதியாக இதில் 4.3-இன்ச் கலர் டிஎஃப்டி (TFT) டிஜிட்டல் டிஸ்ப்ளே திரை உள்ளது. ப்ளூடூத் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை இணைத்து கவாசகியின் 'ரைடியாலஜி' (Rideology) ஆப் வழியாக போன் அலர்ட்டுகள் மற்றும் வாகன விபரங்களை எளிதாகப் பார்த்துக்கொள்ளலாம். மேலும், கிளட்ச் பயன்படுத்தாமல் கியரை மிக வேகமாக மாற்ற உதவும் 'பை-டைரக்‌ஷனல் குவிக் ஷிப்டர்' (Bi-directional Quickshifter) வசதியும் இதில் ஆப்ஷனல் ஆக்ஸஸரியாக வழங்கப்பட்டுள்ளது.

எங்கே கிடைக்கும்? விலை எவ்வளவு?

கவாசகி நிறுவனம் தற்போதைய நிலையில் இந்த புதிய 2027 Z650 S மாடலை சர்வதேச வெளிநாட்டுச் சந்தைகளில் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, கவாசகி இந்த Z650 S வேரியண்ட்டை தற்போதைக்கு இந்தியாவில் விற்பனை செய்வதில்லை. இந்திய வாடிக்கையாளர்களுக்கு இதனுடைய ஸ்டாண்டர்ட் மாடலான கவாசகி Z650 பைக் மட்டுமே அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கிடைக்கிறது.

இருப்பினும், இந்தியாவில் பிரீமியம் மற்றும் சொகுசு பைக்குகளுக்கான டிமாண்ட் அதிகரித்து வருவதால், கவாசகி நிறுவனம் வரும் காலங்களில் அல்லது 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த Z650 S மாடலையும் இந்திய சந்தைக்குக் கொண்டு வர அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி இந்தியாவில் லான்ச் செய்யப்படும் போது இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.6.80 லட்சம் முதல் ரூ.7.20 லட்சம் வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இது விற்பனைக்கு வரும் போது தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள கவாசகியின் அதிகாரப்பூர்வ பிரீமியம் ஷோரூம்களில் காட்சிக்கு வைக்கப்படும்.

649CC பைக்.. 3 புதிய கலர்கள்! 2027 Kawasaki Z650 S-ல் என்ன ஸ்பெஷல்?