#BREAKING: திமுக எம்.எல்.ஏ. சரவணன், எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.!

DMK MLA Dr Saravanan joined the party in the presence of BJP state president L Murugan.

திமுக எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன் பாஜக மாநில தலைவர் எல் முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், திமுக ஒரே கட்டமாக வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று 500 வாக்குறுதிகளை கொண்ட திமுக தேர்தல் அறிக்கையும் முக ஸ்டாலின் வெளியிட்டார். இந்த வேட்பாளர்கள் தேர்வில் திமுகவில் சிலருக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் உள்ளனர்.

அந்தவகையில், திமுக எம்.எல்.ஏ சரவணன் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு மருத்துவர் சரவணன் வெற்றி பெற்றிருந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் எம்எல்ஏ சரவணன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.

தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுக எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், சென்னையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில், திமுக எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பாஜகவின் இணைந்த திமுக எம்எல்ஏ சரவணனுக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.