#BREAKING: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

The AIADMK walked out of the assembly refusing to accept the resolution against the federal government’s agricultural laws.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க மறுத்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை கண்டித்து முன்பு பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, அதிமுகவும் தற்போது வெளிநடப்பு செய்துள்ளது.

முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவசர கோலத்தில் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது எனவும் அதிமுக தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் பார்வைக்கு விவசாயிகளின் கோரிக்கைகளை கொண்டு செல்ல வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.