முஸ்லீம்களின் வாக்குகளை பெறுவதற்காக அகிலேஷ் யாதவ் மதம் கூட மாறுவார் – உத்தர பிரதேச மந்திரி ஆனந்த்!

Uttar Pradesh Minister Anand has said that even Akhilesh Yadav will convert to Islam to get the votes of Muslims.

முஸ்லீம்களின் வாக்குகளை பெறுவதற்காக அகிலேஷ் யாதவ் மதம் கூட மாறுவார் என உத்தர பிரதேச மந்திரி ஆனந்த் கூறியுள்ளார்.

அண்மையில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட போது பேசிய சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்கள், சர்தார் வல்லபாய் பட்டேல், மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா ஆகியோர் ஒரே சிந்தனை உடைய தலைவர்கள். இந்தியாவின் சுதந்திரத்துக்காக மூவரும் போராடினார்கள் என தெரிவித்திருந்தார்.

இவரது கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து விமர்சித்த உத்திரபிரதேசம் மந்திரி ஆனந்த்  ஸ்வருப் சுக்லா அவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக அகிலேஷ் யாதவ் மதம் கூட மாறுவார் என தெரிவித்துள்ளார். மேலும் இஸ்லாமிய உலகத்திற்குச் சவால் விடுபவராக யோகி ஆதித்யநாத் உள்ளார்.

ஆனால் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடமிருந்து அனைத்து ஆதரவையும் பெற்று, அவர்களுக்கு பொருளாதார உதவியை கூட செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.