அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா நிகழ்வு ஜனவரி 13-ல் தொடங்கி பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. கங்கை, யமுனா, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் நிகழ்வில் புனித நீராட நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிராயாக்ராஜிற்கு வருகை தருகின்றனர். இப்படியாக நாள் தோறும் பிரயாக்ராஜில் பக்தர்கள் கூடி வரும் நிலையில் இன்று திடீரென மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு […]
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம் வரிப்பகிர்வு தொகையை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம், ரூ.1,73,030 கோடி ரூபாயனது 2025 ஜனவரி மாதத்திற்கு மாநில வாரியாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2024இல் இந்த வரிப்பகிர்வு ரூ.89,086 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த முறை மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த திட்டங்களுக்கு செலவிட இந்த முறை அதிக தொகை ஒதுக்கீடு […]
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக இந்து கோவில் ஒன்று இருந்ததாகவும், அந்த கோவிலை இடித்துவிட்டு அதன் பிறகு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது எனக் கூறி வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் சம்பலில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து பார்த்த நீதிமன்றம் மசூதி ஆய்வு செய்யவேண்டும்…அதற்கு ஒரு குழு அமைத்து அதற்கான […]
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக கோவில் ஒன்று இருந்ததாகவும், அந்த கோவிலை இடித்துவிட்டு அதன் பிறகு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது எனக் கூறி வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் சம்பலில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து பார்த்த நீதிமன்றம் மசூதி ஆய்வு செய்யவேண்டும்…அதற்கு ஒரு குழு அமைத்து அதற்கான ஆய்வை […]
லக்னோ : இன்று மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலும், ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவும் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போல பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்களும் நடைபெற்று வருகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில், காஜியாபாத், கதேஹாரி, கெய்ர், குந்தர்கி, கர்ஹால், மஜவான், மீராபூர், புல்பூர் மற்றும் சிசாமாவ் ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் காலை 7 மணி முதல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. […]
ஆக்ரா : உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் செயல்பட்டு வரும் ஒரு பழைய பைக் ஷோ ரூமில் டீ கடைக்காரரை அப்பா எனக்கூறி ரூ.1 லட்சம் மதிப்புள்ள பைக்கை ஒரு இளைஞர் திருடி சென்றுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பழைய பைக் ஷோ ரூம் ஊழியர் செய்தியாளர்களுக்கு அளித்த தகவலின்படி, கடந்த நவம்பர் 3ஆம் தேதி சாஹில் என்ற இளைஞர் பைக் ஷோ ரூம் வந்துள்ளார். அங்குள்ள ரேஸிங் பைக்குகளை பார்த்துவிட்டு, அதில் […]
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு முக்கியமான காரணமே, அந்த கொலை செய்த கொலையாளி கொலை செய்யச் சொன்னவர்கள் மீது புகார் அளித்தது தான். அதாவது, கடந்த ஜூன் 7, 2023 அன்று, வழக்கறிஞர் அஞ்சலி என்பவர் பால் பண்ணையிலிருந்து திரும்பும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் யஷ்பால், பாட்டியா, சர்மா, நீரஜ் சோப்ரா உட்பட மொத்தம் 5 பேர் கைது […]
லக்னோ : உத்திர பிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு பல்வேறு விதமாக பரிந்துரைகளை அம்மாநில மகளிர் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் அண்மையில் லக்னோவில் நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட மகளிர் ஆணைய உறுப்பினர்கள், பெண்களின் பாதுகாப்பானது பொது இடங்கள் மற்றும் வணிக பயன்பாட்டு இடங்களில் உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு உடற்பயிற்சி கூடம், யோகா பயிற்சி மையம், முடித்திருத்தும் நிலையம் ஆகியவற்றில் பெண்களுக்கு பெண் பயிற்சியாளர்கள், பெண் ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் […]
சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல் (தை 1) கொண்டாடப்படுகிறது. அதே போல, வடமாநிலங்களில் சூரியனை வணங்கும் விதமாக சத் பூஜையானது (Chhat Puja) ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொண்டாப்படுகிறது. முதலில் பீகார், உத்திர பிரதேசம், நேபாளம் ஆகிய மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வந்த இந்த பண்டிகையானது தற்போது பெரும்பாலான வடமாநிலங்களில் சூரியனை வணங்கும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. சென்னை பகுதியில் வசிக்கும் […]
உ.பி : இந்தியாவில் பலரும் பல விஷயங்களுக்காக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் நாடு முழுவதும் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது நீட் தேர்வு தான். ஆனால், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயில்வதற்கு முக்கியமாக அமைவது இந்த நீட் தேர்வு தான். இப்படி தேர்வு முறை சரியில்லை, கேள்விகள் கடிமானது என பல எதிர்ப்புகள் ஒரு பக்கம் வந்தாலும், மறுபக்கம் இந்த தேர்வு எழுதும் மாணவர்களில் ஒரு சிலர் குறிப்பாக ஏழை எளிய மாணவர்கள் நன்றாக […]
உத்திரப் பிரதேசம் : மாநில அரசு திட்டங்களை மக்களிடம் இணைய வாயிலாக பிரபலப்படுத்தினால் அதற்கு அரசு ஊதியம் வழங்கும் மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மாநில அரசுகள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்தி வருகிறது. அந்த அனைத்து திட்டங்களும் மக்கள் மத்தியில் தெரிந்து இருக்குமா என்றால், அது சந்தேகமே. ஒவ்வொரு திட்டமும் தகுதி வாய்ந்த நபர்கள் அனைவரிடத்திலும் சரியாக சென்றடைவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. சில பிரதான திட்டங்களுக்கு மட்டுமே அரசு […]
உத்தரப் பிரதேசம் : பாராபங்கி மாவட்டத்தில்பள்ளியின் முதல் தளம் இடிந்து விழுந்ததில் 40 மாணவர்கள் காயமடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோவை ஒட்டியுள்ள பாரபங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளி கட்டிடத்தின் முதல் தளத்தின் வராண்டாவின் தளம் சரிந்து விழுந்ததில் எட்டு முதல் 15 வயதுக்குட்பட்ட 40 குழந்தைகள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தை தொடர்ந்து பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் போலிஸுக்கு தகவல் தெரிவிக்க, உடனே விரைந்த காவலர்கள் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். […]
உத்திர பிரதேசம் : 1985ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் ஜான்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த காவல்துறை அதிகாரியின் கொலை வழக்கில் 38 ஆண்டுகள் கழித்து 9 பேருக்கு நேற்று மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த கொலை சம்பவ நிகழ்வு குறித்தும், வழக்கின் விவரங்கள் குறித்தும் அரசு வழக்கறிஞர் சதீஷ் சந்திர பாண்டே பல்வேறு தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கடந்த 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதியன்று சிரோஹி பூர்வா பகுதியில் ஒரு […]
டெல்லி: கன்வார் யாத்திரை நடைபெறும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கடைகளில் உரிமையாளர் பெயரை வெளிப்படுத்த வேண்டும் என்ற மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது இந்து கடவுள் சிவனுக்கு அபிஷேகம் செய்யவதற்கு கங்கையில் இருந்து புனித நீர் எடுக்கும் ஆன்மீக நிகழ்வு இன்று முதல் கன்வார் யாத்திரை எனப்படும் காவடி யாத்திரை எனும் பெயரில் தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் இந்த ஆன்மீக நிகழ்வு கங்கை ஆறும் ஓடும் மாநிலங்களில் நடைபெறும். இதற்கு வடமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். அண்மையில், […]
உத்தரபிரதேசம் : கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற பகுதியில் சண்டிகர்-திப்ருகர் விரைவு ரயிலின் குறைந்தது 12 பெட்டிகள் உத்தரபிரதேசத்தின் கோண்டாவில் இன்று தடம் புரண்டன. இதனைத்தொடர்ந்து, மீட்பு பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும், 25 பேர் காயமடைந்தனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பல ஏசி பெட்டிகள் மோசமான நிலையில் உள்ளதால் குறைந்தது 12 […]
உத்தரப் பிரதேசம் : அலிகார் மாநிலத்தில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் இளைஞர் ஒருவர் தனது தாயை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களுடன் ஏற்பட்ட சொத்துத் தகராறில் தனது தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக அந்த இளைஞர் கூறிய சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அந்த இளைஞர் தனது தாயை தீ வைத்து எரிக்கும் போது சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி […]
உத்தரப்பிரதேசம் : மாநிலம் உன்னாவ்வில் ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் இன்று காலை டெல்லி நோக்கிச் சென்ற டபுள் டக்கர் பேருந்து பால் டேங்கர் மீது மோதியதால் கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். மேலும் பலர் இந்த விபத்தில் காயமடைந்தார்கள். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த அனைவரையும் மீட்டு, பாங்கர்மாவில் உள்ள சமூக நல மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் […]
உத்தரபிரதேசம் : ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரை கடந்த 35 நாட்களில் 6 முறை பாம்பு கடித்துள்ளது. ஒவ்வொரு முறையும் பாம்புகள் அவரை கடிக்கும் போது, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு, அவர் மருத்துவமனையையில் வீடு திரும்புகிறார். தனது வீட்டில் பாம்பு கடிப்பதால் அத்தை வீட்டுக்கு சென்றாலும், அங்கும் பாம்பு கடித்ததாக தூபே வேதனை. அதுமட்டுமன்றி பாம்பு கடிக்க வருவதை தான் முன்கூட்டியே […]
உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர் இல்லாமல் நகர்ந்து மோதி பெட்ரோல் நிலைய ஊழியர் தேஜ்பால் என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை பஸ் ஒன்று பெட்ரோல் பங்கிற்கு வந்து இருந்தது. அப்போது அருகில் பெட்ரோல் நிலைய ஊழியர் பைக் ஒன்றுக்கு காற்று அடித்து கொண்டு இருந்தார். பின், நின்று […]
உத்தரப்பிரதேசம் : ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 உயிர்கள் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. தற்பொழுது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து பேசினார். உ.பி.யின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த ஜூலை 2ஆம் தேதி போலே பாபாவின் ஆன்மிக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அலிகாரில் […]